இந்த பிரபலம் யாருன்னு தெரியுதா..? அட இந்த விஜய் பட நடிகையா
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் பட நககையின் சிறுவயது புகைப்படம் இணையத்தை ஆக்கிரமிர்து வருகின்றது.
நடிகை ராஷ்மிகா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் அழைக்கப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி'கன்னடத்தில் நடிகையாக அறிமுகமானார். இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் இன்றுவரை நீங்காத இடம் பிடித்துள்ளார்.
பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிகை ரஷ்மிகா தனது இயற்கை அழகால் அனைவரையும் கவர்ந்து வருகிறார்.
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்த இவர், இதை தொடர்ந்து தளபதி விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்தில் நடித்திருந்தார்.
அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அனிமல்’ திரைப்படம் பல விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சாதனை படைத்தது.
அடுத்து அவரின் நடிப்பில் 'புஷ்பா 2', 'ரெயின்போ' போன்ற படங்கள் தயாராகி வருகின்றன. அனிமல் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் ராஷ்மிகாவின் சிறு வயது புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.