நடிகர் ஜனகராஜ் ஞாபகம் இருக்கா? இப்போ எப்படி இருக்காரு பாருங்க
நீண்ட இடைவேளைக்கு பிறகு நகைச்சுவை நடிகர் ஜனகராஜ் படம் நடிப்பதில் ரீ என்றி கொடுத்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் ஜனகராஜ்
தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பினால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ள ஜனகராஜ் கடைசியாக 96 படத்தில் ஸ்கூல் வாட்ச்மேனாக நடித்துள்ளார்.
ஆரம்பத்தில் நடிப்பிற்காக வாய்ப்பு தேடிய தருணத்தில் விபத்தில் சிக்கி முகவாதம் ஏற்பட்டு நோயினால் பாதிக்கப்பட்டார்.
இவர் கிழக்கே போகும் ரயில் திரப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தின் மூலம் நுழைந்து பின்னர் வில்லனாக நகைச்சுவை நடிகனாக குணச்சித்திர வேடம் என பல கதாபாத்திர வேடங்களில் நடித்துள்ளார்.
இவர் நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மீண்டும் இவர் உயிர் கொடுத்ததை போலவே இருக்கும். இவரின் பெயரை சொல்லும் போதெல்லாம் எல்லோருக்கும் ஞாபகத்தில் வருவது அவரின் சிரிப்புத்தான்.
இவர் நகைச்சுவையாக பேசிய வார்த்தைகள் தான் இன்னும் மீம்ஸ்களாக சமூக வலைத்தளங்களில் சுற்றிக்கொண்டு இருக்கிறது.
இவர் சில காலங்களாக நடிப்பில் இருந்து ஓய்வு பெற்று இருந்தார், இப்போது பல வருடங்களுக்கு பின் தாத்தா என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர் தற்பொது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இவர் உடல் நிலை சரியில்லாமல் இருந்து முகவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த போது படத்தில் நடிக்க இன்னுமொரு வாய்ப்பு கிடைத்தால் கட்டாயமாக நடிப்பேன் எனகூறியிருந்தார்.
அவர் கூறியது போலவே தற்போது அவரின் நடிப்பில் தாத்தா திரைப்படம் வெளியாக இருக்கிறது.