சினிமா பிரபலங்களுக்கும் ஹீரோவான தல தோனி! குவிந்த வாழ்த்துக்கள்
ராஞ்சியில் பிறந்த சிங்கம் தனது சரியான ரயிலை பிடித்து கிரிக்கெட் ஊருக்குள் நுழைந்து ஹெலிகாப்டர் சிக்சர்களை விளாசிய தல தோனியின் 40வது பிறந்தநாள் இன்று.
சாமானிய மக்கள் மட்டுமல்ல சினிமா பிரபலங்களும் இவருக்கு ரசிகர்கள் தான்.
1981ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதி, ராஞ்சியில் பிறந்து, கிரிக்கெட் கனவுகளைச் சுமந்து, வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி இந்திய கிர்க்கெட் அணிக்கே கேப்டனாக மாறி தோனியை ரசிகர்கள் எந்த நேரத்திலும் கொண்டாடத் தவறியதில்லை.
வெற்றி, தோல்வி இரண்டிலும் அவரின் பக்கம் நின்ற அதே ரசிகர்கள் தான் இன்று அவரின் பிறந்த நாளையும் சமூகவலைத்தளங்களில் அதகளப்படுத்தி வருகின்றன.

இவர் தலைமையில் இந்திய அணி மூன்று விதமான ஐசிசி கோப்பைகளையும் கைப்பற்றியுள்ளது.
இதுவரை வேறு எந்த கேப்டனும் செய்யாத சாதனை அது. இப்படி வரலாற்று சாதனைகளைப் படைத்திருக்கும் தோனிக்கு, ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

மகேந்திரசிங் தோனி, கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துவிட்டார். தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மட்டுமே வழிநடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

