சிட்டிசன் பட நடிகையை ஞாபகம் இருக்கா? அடையாளமே தெரியாதளவு மாறிட்டாங்களே
அஜித் நடிப்பில் வெளியான சிட்டிசன் திரைப்பட நடிகை வசுந்தரா தாஸுன் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை வசுந்தரா தாஸ்
பெங்களூருவை பிறப்பிடமாக கொண்ட நடிகை வசுந்தரா தாஸ் நடிப்புத் துறைக்கு வருவதற்கு முன்பே மிகச்சிறந்த பாடகியாக வலம் வந்தவர். இவர் பாடிய பல பாடல்கள் என்றும் ரசிகர்களின் விருப்ப பட்டியலில் இடம்பிடித்துவிடுகின்றன.
இவர் 1999-ஆம் ஆண்டு கமலஹாசன் இயக்கத்தில் வெளியான வந்த ஹேராம் திரைப்படத்தில் கமலின் மனைவியாக நடித்திருக்கிறார்.
இந்த படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் வசுந்தரா தாஸூற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தல்
அதனை தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைத்த போதிலும் இந்தி படங்களில் நடிக்க சென்றுவிட்டார். சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அஜித் நடிப்பில் வெளியான ‘சிட்டிசன்’ படத்தில் கதாநாககியாக கலமிறங்கினார்.
‘சிட்டிசன்’ படமும் பெரிய அளவில் ஹிட் அடித்த நிலையில், மீண்டும் அவருக்கான பட வாய்ப்புகள் தமிழில் குவியத் தொடங்கியது. ஆனால் வேறு மொழி படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டிய அவர் இந்த படத்தின் பின்னர் தமிழ் படங்களில் நடிக்கவில்லை.
இந்தி, மலையாளம், கன்னட மொழிகளை நடித்த வசுந்தரா அதிகமாக இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் நடிகையாக மட்டுமல்லாமல் பாடகியாகவும் கலக்கியவர். சக்கலக்க பேபி சக்கலக்க பேபி என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் முதல் முதலாக பாடிய வசுந்தரா தாஸ் ரிதம் படத்தில் ஐயோ பத்திக்கிச்சு பாடல்களை பாடி மக்கள் மனதில் தனது தனித்துவமான குரலாலும் நீங்காத இடம் பிடித்தவர்.
2007 ஆம் ஆண்டுக்கு பின்னர் சினிமாவுக்கு முழுக்கு போட்ட வசுந்தரா தாஸ் என்ன ஆனார் என்பதே ரசிகர்களுக்கு தெரியாமல் போனது. இந்நிலையில் இவரின் தற்போதைய புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உடல் எடை அதிகரித்து அடையாளமே தெரியாமல் மாறிப்போன வசுந்தரா தாஸ் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |