“நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” - நடிகையின் அதிரடி பதிவு... அப்படி என்னாச்சு?
இன்டாகிராமில் நடிகை ஒரு அவருக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக ஒரு பதிவை தற்போது பதிவிட்டுள்ளார்.
லவ் டுடே நடிகை
பிரபல நடிகை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். 2017ம் ஆண்டு வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரவீனா ரவி.
இவர் நண்பன், வீரமே வாகை சூடும், லவ் டுடே, மாமன்னன்’ போன்ற பல படங்களில் நடித்தவர் தான் நடிகை ரவீனா ரவி.
இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒரு நபரின் தொல்லையால் பல கஷ்டங்களை அனுபவித்து வருவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இந்த நபர் தன்னை மட்டும் தொந்தரவு செய்யாமல் தன்னுமைய உறவுகளையும் நண்பர்களையும் சேர்த்து தொந்தரவு செய்வதாக அவர் கூறியுள்ளார்.
இந்த பதிவை அவர் பதிவிட காரணம் பொதுமக்களின் விழிப்புணர்விற்காக என கூறியுள்ளார். குறிப்பிட்ட நபரின் தொல்லையை காவல் துறையில் புகார் கொடுத்துவிட்டு அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என நம்பி ரவீனா ரவி அமைதியாக இருந்ததாக கூறியுள்ளார்.
ஆனாலும் சபரிஷ் என்ற நபரும், அவரது இரண்டு சகோதரர்களும் தொல்லை கொடுப்பதை நிறுத்தவில்லை.
மெசேஜ் செய்தல் கமன்ட செய்தல் எனக்கு நெருக்கமானவர்களுடன் உன்னை வைத்து ஆபாசமாக பேசி எனக்கு மன உளைச்சலை உண்டாக்குகின்றனர் என நடிகை கூறி உள்ளார்.

சட்ட ரீதியாகவும் நடவெடிக்கை எடுத்தும் அவர்கள் திருந்தவில்லை. வேறு வேறு அக்கவுண்ட்களில் இருந்து என்னை தொடர்ந்து தொந்தரவாகவும் ஆபாசமாகவும் பேசுகிறார்கள் என நடிகை பதிவிட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களே இதுபோன்ற விடயம் எங்களுக்கு நடந்தால் அதில் நீங்கள் கமென்டுகளில் பேசாதீர்கள்.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது சென்னை தான் எனப்படுகின்றது. எனவே இதற்கு நிதி கிடைக்கும் என நம்புகிறேன் என அவர் கூறியுள்ளார். நடிகையின் இந்த பகீர் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |