பார்ப்பதற்கு வெல்லக்கட்டி போலிருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?
சிறுவயது முதல் மீடியா துறையில் ஆர்வமாக இருக்கும் பிரபலத்தின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
மஞ்சிமா மோகன்
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.
இவர் மலையாள சினிமாவில் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்.
இதனை தொடர்ந்து இவருக்கு கோலிவுட் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார்.
பார்ப்பதற்கு அப்படியே சிறு வயது குஷ்பூ போல் இருந்ததால் மக்கள் மனதில் இலகுவாக இடம்பிடித்தார்.
அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என எதிர்பார்த்த வேளையில், நடிகர் கார்த்திக்கின் மகன்- கௌதம் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.
சிறுவயதிலேயே இவ்வளவு திறமையா?
இந்த நிலையில் மஞ்சிமா மோகனின் சிறுவயது புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
புகைப்படத்தில் பார்க்கும் பொழுது சிறுவயதிலேயே பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |