நடிகர் விக்ரமின் மனைவி இவங்களா? இதுவரையில் யாரும் பார்த்திடாத புகைப்படம்
நடிகர் விக்ரமின் மனைவி, குழந்தைகளின் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விக்ரம்
தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு என தன்னையே தியாகம் செய்த நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சியான் விக்ரம்.
இவர், சினிமாவில் வெற்றிக்காக ஏறத்தாழ 15 ஆண்டுகள் காத்திருந்தார். இதற்கிடையில் கலாட்டா குடும்பம், சிறகுகள் உள்ளிட்ட ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் பங்கேற்றுள்ளார். இது போன்று சினிமாவில் சாதிப்பதற்காக பல நாட்களாக காத்திருந்த விக்ரம் ஆரம்ப காலங்களில் டப்பிங் கலைஞராக தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களில் நடிகர்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.

அந்த வகையில், நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான காதலன், ராசையா, விஐபி என பல்வேறு திரைப்படங்களில் பிரபுதேவாவுக்கு இவர் தான் குரல் கொடுத்துள்ளார்.
அதே போன்று நடிகர் அஜித்தின் முதல் திரைப்படமான அமராவதி, பாசமலர்கள் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் அஜித்தின் குரலாக சியான் விக்ரம் குரல் கொடுத்துள்ளார்.

மனைவி எப்படி இருக்காங்க பாருங்க
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான சேது மற்றும் ஐ திரைப்படங்கள் ரசிகர்கள் உட்பட பிரபலங்களையும் வியப்பில் ஆழ்த்தியது.
கடைசியாக நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படம் வெற்றிப்படமாக இல்லாவிட்டாலும் அதில் விக்ரமின் நடிப்பு பயங்கரமாக பேசப்பட்டது.

இவ்வளவு பிரபலமாக இருக்கும் நடிகர் விக்ரம் அவரின் மகள், மகன் ஆகியோரை கேமராவுக்கு முன் காட்டியுள்ளார். ஆனால் அவரின் மனைவியை இதுவரையில் வெளியில் காட்டியதில்லை. இதற்கான காரணம் சரியாக தெரியாவிட்டாலும் விக்ரம் குடும்பத்திற்கான சுதந்திரத்தை கொடுக்க விரும்புகிறார் என்பது தெளிவாகின்றது.
இப்படியொரு சமயத்தில் சியான் விக்ரமின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருக்கும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் அவருடைய மனைவி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். இவரை ஏன் சியான் இதுவரையில் வெளியில் காட்டாமல் இருக்கிறார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.


| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |