மீண்டும் கிறிஸ்மஸ் கொண்டாட்டம்: எங்கு தெரியுமா?
உலகம் முழுவதும் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள் கிறிஸ்துமஸ் தினத்தை மிகவும் சிறப்பு பிரார்த்தனையுடன் கொண்டாடியுள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை
பொதுவாகவே கிறிஸ்வதவர்கள் தங்களது கிறிஸ்மஸ் பண்டிகையை டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடுவது வழக்கம்.
ஆனால், கிறிஸ்மஸ் முடிந்து புதுவருடத்தையும் ஆரம்பித்து விட்ட நிலையில் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் ஜனவரி மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் தான் கிறிஸ்மஸ் கொண்டாடுவது வழக்கமாக கொண்டாடுவார்களாம்.
இந்நிலையில் பெத்லஹேமில் உள்ள கிறிஸ்து பிறந்ததாக நம்பப்படும் நேட்டிவிட்டி தேவாலயத்தில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்துவர்கள் நள்ளிரவு பிரார்த்தனைகளை மேற்கொண்டுள்ளனர்.
பிரார்த்தனையில், பலஸ்தீனிய அதிபர் Mahmoud Abbas மற்றும் பிரதமர் Mohammad Shtayyeh உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், ரஷ்யாவில் உள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கதீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.
வரலாறு
அதாவது 1582ஆம் ஆண்டு 8வது போப் கிரிகோரியால் கிரிகோரியன் நாட்காட்டிஅறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகில் மிகவும் பரவலாக பயன்படுத்தப்படும் சிவில் நாட்காட்டியாகும்.
இதன்படிதான், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை கொண்டாடி வருகின்றனர்.
1923ஆம் ஆண்டு கிரிகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்ட கிரேக்க ஆர்த்தடாக்ஸ் சர்ச் மற்றும் உக்ரேனிய விசுவாசிகளின் சில பகுதிகளைத் தவிர்த்து மற்றவர்கள் இன்றும் ஜூலியன் நாட்காட்டியையே தொடர்ந்தும் பயன்படுத்தி வருகின்றார்கள்.
இது ஒரு சூரிய நாட்காட்டியாகும். இது கிரிகோரியன் எண்ணை விட 13 நாட்கள் தாமதமானது என குறிப்பிடத்தக்கது.