கொழுப்பு கரைந்து கடகடவென ஓட வேண்டுமா? இந்த ஒரு சூப் செய்யும் அற்புதம்
சூப் என்றாலே ஆட்டுக்கால் சூப் போன்ற சுவையான சூப்பை குடிக்க வேண்டும் என்றுதான் மக்கள் விரும்புவார்கள். ஆனால் வாரத்திற்கு மூன்று நாட்கள் கொள்ளு சூப் குடித்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் எல்லாம் கரைந்து உடலுக்கு நன்மை தரும் என்று கூறப்படுகிறது.
கொழுப்பை கரைக்கும் சூப்
உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்கக்கூடிய தன்மை வாய்ந்தது கொள்ளு என்றும் இதனை வாரத்திற்கு மூன்று நாட்கள் சூப்பாக செய்து எடுத்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.
கொள்ளுடன் பூண்டு மஞ்சள் தூள் மிளகு, சீரகம் தேவையான அளவு உப்பு கலந்து சூப்பாக செய்து குடிக்க வேண்டும் என்றும் இதனை இரவு சாப்பாட்டுக்கு பிறகு இளம் சூட்டில் குடித்தால் உடலில் உள்ள அனைத்து கொழுப்புகளும் கரைந்து விடும் என்றும் கூறப்படுகிறது.