உயிரை சைலன்ட்டாக கொல்லும் கொலஸ்ட்ரால் - கட்டுக்குள் கொண்டு வர இதோ டிப்ஸ்
உடலில் உயர் கொழுப்பு இருந்தால் மிகப் பெரிய ஆபத்து நமக்கு வரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவருக்கு அதிகளவில் உடம்பில் கொழுப்பு இருந்தால் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
எனவே நம் உடம்பில் கொழுப்பின் அளவை எப்போதுமே கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் உணவு முறை மாற்றத்தால் இளைஞர்களும் உயர் கொலஸ்ட்ராலால் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர்.
பீட்சா, பர்கர், நொறுக்குத் தீனிகளை அதிகளவில் சாப்பிடுவதாலும், ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தாலும் இந்த மாதிரியான பிரச்சினைகளில் சிக்கிக்கொள்கிறார்கள்.
எனவே, நாம் உண்ணும் உணவுமுறையும், எப்படி உடம்பில் உள்ள கொழுப்பை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று பார்ப்போம் -
1. ஹை கொலஸ்ட்ரால் சைலன்ட் கில்லராக செயல்படும். திடீரென்று ஒருவருக்கு மாரடைப்பை வரவழைத்துவிடும். எனவே, கொலஸ்ட்ரால் பாதிக்கப்பட்டவர்கள் நன்றாக தூங்க வேண்டும். அதிகாலையிலேயே எழுந்திருக்க வேண்டும். சத்தான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
2. ஹை கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் தினமும் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை பழங்களை சாப்பிட வேண்டும்.
3. கொலஸ்ட்ரால் பிரச்சினை இருப்பவர்கள், இலவங்கப்பட்டையை பொடி செய்து தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு சிட்டிகை அளவு போட்டு பருகி வந்தால் நன்மை கொடுக்கும். கொலஸ்ட்ரால் கட்டுக்குள் வரும். அதிக இலவங்கப்பட்டையை சேர்த்துக் கொள்ளக்கூடாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |