புற்றுநோயால் போராடும் பிரபல நடிகை... தற்போதைய நிலை என்ன?
Chokka Thangam Actress Uma Cancer Treatment: சொக்கத்தக்கம் படத்தில் மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு தங்கையாக நடித்த பிரபல நடிகை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார்.
நடிகை உமா சங்கரி
தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடிப்பில் வெளியான வீரநடை படத்தில் அறிமுகமானவர் தான் நடிகை உமா சங்கரி. பின்பு மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நடிப்பில் வெளியாக சொக்கத்தங்கம் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார்.
இவரது நடிப்பு மக்கள் மத்தியில் பிரபலமானதுடன், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக வலம்வந்த இவர் 2006ம் ஆண்டு துஷ்யந்த் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் உள்ள நிலையில், உமாவிற்கு திடீரென புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டது. கடந்த ஜுலை மாதம் உமா சங்கரிக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாக கண்டறியப்பட்டது.
இதைத் தொடர்ந்து தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார். கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சைகள் நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் புகைப்படம் ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
ரசிகர்கள் இவருக்காக அதிகமான பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் உமா சங்கரி தற்போது புகைப்படம் ஒன்றினை வெளியிட்டு, தனது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து இன்ஸ்டாவில் உருக்கமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய நிலை என்ன?
நடிகை உமா சங்கரி தான் பதிவிட்டுள்ள பதிவில், கீமோதெரபி சிகிச்சைகள் மிகவும் கடினமாக இருந்தாலும், அதை விட நான் வலிமையானவள். கடைசி நிலை சிகிச்சையான ஊசி மருந்துகள் எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தை நோக்கிய முதல்படி என்று் அதிக தைரியத்துடனும், நம்பிக்கையுடனும் இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
இந்த மாதிரியான கடினமான சூழ்நிலையிலும், முகத்தில் எந்தவொரு கவலையோ, சோர்வோ இல்லாமல் மனம் தளராமல் புன்னகையுடன் போராடி வரும் இவரைப் பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருவதுடன், பிரார்த்தனையும் செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகிய நிலையில், தற்போது வெளியிட்டுள்ள பதிவும் அதிக வைரலாகி வருகின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |