Chocolate Mug Cake தயாரிப்பது எப்படி? ரெசிபி இதோ
கேக் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பு உணவு.
கொஞ்சம் வித்தியாசமாக வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த Chocolate Mug Cake.
இதற்கு தேவையான பொருட்களின் விலையும் குறைவாகத் தான் இருக்கும். ஆகவே ஒரு Mug அளவுள்ள கேக் வீட்டிலேயே எப்படி ஈஸியா செய்யலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
Land O'Lakes
தேவையான பொருள்கள்
- பிரவுன் சுகர்- 1 ஸ்பூன்
- பீனட் பட்டர்- 2 ஸ்பூன்
- மைதா மாவு- 1 ஸ்பூன்
- கோக்கோ பவுடர்- 1 ஸ்பூன்
- முட்டை-1
- பேக்கிங் பவுடர்- 1/4 ஸ்பூன்
- சாக்லேட் சிப்ஸ்- ஒரு கைப்பிடி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணை சேர்க்க வேண்டும்.
அதில், பிரவுன் சுகர், பீனட் பட்டர், கோக்கோ பவுடர், மைதா மாவு, முட்டை மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து, ஃபோர்க் கரண்டியால் நன்றாக அடித்து கலக்கவும்.
The Farmgirl's Dabbles
இறுதியாக அதில் சாக்லேட் சிப்சை சேர்க்க வேண்டும். இந்த கலவையை Mug கின் உள்ளே வைக்க வேண்டும். பாதி அளவு வரை மட்டுமே வைக்க வேண்டும்.
அதன்பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து உள்ளே ஒரு ஸ்டாண்டு வைத்து 15 நிமிடம் ஃப்ரீஹீட் செய்ய வேண்டும்.
அதன்பிறகு Mug கேக்கை எடுத்து உள்ளே வைத்து 25 நிமிடம் வேகவைத்து எடுக்க வேண்டும்.25 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான Mug Cake தயார். ஆறியபின்னர் பரிமாறலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |