மூக்கு ஒழுகுதல், தும்மல் போன்ற அலர்ஜி பிரச்சனையா? Chlorpheniramine பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
அலர்ஜியால் ஏற்படும் மூக்கு ஒழுகுதல், கண்களில் நீர் வடிதல், மூக்கடைப்பு, தும்மல், தோலில் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு Chlorpheniramine மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது.
எவ்வாறு வேலை செய்கிறது?
ஆன்டி அலர்ஜியாக செயல்படும் Chlorpheniramine மாத்திரைகள் மகரந்தம், வீட்டு விலங்குகள், வீடுகளிலுள்ள தூசிகளால் ஏற்படும் அலர்ஜிக்கு மருந்தாகும்.
நம் உடல் இத்தகைய அலர்ஜியை சந்திக்கும் போது histamine என்ற வேதியியலை உற்பத்தி செய்யும்.
Chlorpheniramine, வேதியியலின் விளைவுகளை குறைப்பதால் அலர்ஜியால் ஏற்படும் தொந்தரவுகளை குறைக்கிறது.
பக்கவிளைவுகள்
வாய் உலர்ந்துபோதல்
தூக்கம்
மயக்கம்
உடல்சோர்வு
பதட்டம்
போன்றவை பொதுவான அறிகுறிகளாகும்.
இதுதவிர ரத்த அழுத்தம் அதிகரிப்பது, உடல் எடை அதிகரிப்பது, எப்போதும் தூக்க கலக்கத்துடன் இருப்பது, தொடர்ச்சியான சோர்வு போன்ற பக்கவிளைவுகள் இருந்தால் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.
Chlorpheniramine மாத்திரைகள் எடுத்துக்கொண்டு ஆபத்தான இயந்திரங்களில் பணிபுரிய வேண்டாம்.
இதுமட்டுமல்லாது ஆல்கஹால் எடுத்துக்கொள்வதும் ஆபத்துகளை ஏற்படுத்தலாம்.
Shutterstock
யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது?
எந்தவொரு மருந்தாக இருந்தாலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒன்றே, எனவே Chlorpheniramine மாத்திரைகளையும் சுயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
மருத்துவரை சந்திக்கும் போது வேறு ஏதாவது ஒரு தொந்தரவுக்கு மருந்துகளை எடுத்துக்கொண்டீர்கள் என்றாலும் மருத்துவரிடம் அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.
தாய்ப்பாலூட்டும் பெண்கள் இந்த மாத்திரைகளை தவிர்க்கலாம், ஏனெனில் இது தாய்ப்பால் சுரப்பை குறைக்கலாம்.
Thinkstock
இதேபோன்று கர்ப்பிணிகள், சுவாச பிரச்சனை இருப்பவர்கள், இதய மற்றும் கல்லீரல் நோயாளிகள், வயிற்று பிரச்சனை இருப்பவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த வேண்டாம்.
குழந்தைகளுக்கு கொடுக்கும் முன்பும் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவை காட்டிலும் அதிகளவு கொடுக்க வேண்டாம், மருத்துவர் பரிந்துரைத்த நாட்கள் மட்டுமே கொடுக்க வேண்டும்.
குறிப்பு
மிக முக்கியமாக தொடர்ச்சியாக 7 நாட்களுக்கு மேல் Chlorpheniramine மாத்திரைகள் பயன்படுத்துவது ஆபத்தான ஒன்றே, அதற்கு மேலும் உங்கள் பிரச்சனை சரியாகவில்லை என்றால் மருத்துவரை உடனே தொடர்பு கொள்ளுங்கள்.