அடேங்கப்பா.. வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் எவ்வளவு பாருங்க
வீர தீர சூரன் திரைப்படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம்
சீயான் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தான் தங்கலான்.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு இருந்தது.
மாபெரும் வெற்றியை அடையும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கலான் சுமாரான வெற்றியை தான் பெற்றது என ரிப்போர்ட் வந்தது. இருந்தாலும் வழக்கம் போல விக்ரமின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது.
இதனை தொடர்ந்து இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். மார்ச் 27 ஆம் தேதி திரைக்கு வரவிற்கும் படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பள விவரங்கள்
இந்த திரைப்படத்தில் துஷாரா, எஸ்.ஜெ சூர்யா, மலையாள நடிகர் சுராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.
இந்த நிலையில் வீர தீர சூரன் படத்திற்காக விக்ரம் வாங்கிய சம்பளம் பற்றி ஒரு தகவல் கிடைத்துள்ளது.
தங்கலான் படத்திற்காக விக்ரம் 25 முதல் 30 கோடி வரை சம்பளமாக வாங்கியதாகவும், இந்த திரைப்படத்திற்கு 50 கோடி சம்பளம் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் எந்த அளவு உண்மை என தெரியவில்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
