காலில் விழுந்தும் விக்ரம் கண்டுக்கல...மனசு வலிக்குதுனு கதறிய ரசிகர்! பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ
கோப்ரா படம் பார்க்க வந்த விக்ரம் காலில் விழுந்து புகைப்படம் எடுப்பதற்கு ரசிகர் ஒருவர் அனுமதி கேட்டும் அதை கண்டுக்காமல் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம்.
நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் தனெக்கென ஒரு முத்திரையை பதித்து உள்ளார்.
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் நடித்து உள்ளார்.
இந்த நிலையில் கோப்ரா படம் இன்று திரையறங்கில் வெளியாகியுள்ளது. மிக நீண்ட நேரம் வரிசையில் நின்ற ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுப்பதற்காக காலில் விழுந்து அனுமதி கேட்டுள்ளார்.
விக்ரம் மறுத்த காரணத்தால் அவர் மனமுடைந்து ஊடகவியளாலர்களிடம் பேசியுள்ளார். நான் படத்தைப் பற்றி குறை கூறவில்லை இருந்தாலும் போட்டோகிராபர், மீடியா, பிரஸ் போன்ற நபர்கள் இருக்கும் பொழுது அவர்கள் சென்றிருந்தால் கூட எனக்கு ஒன்றும் தெரிந்து இருக்காது.
ஆளே இல்லாத பொழுது அவர்கள் சென்றது தான் வருத்தமாக உள்ளது .

மேலும் நான் இனிமேல் தமிழ் சினிமா பார்க்க போவதில்லை என்றும் நான் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற சினிமாவை பார்த்துக்கொள்கிறேன்.
ஐயோ சாமி இனிமேல் எனக்கு தமிழ் சினிமாவை வேண்டாம் என அந்த கோபத்தை வெளி காட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.