Chitra Pournami 2022: சித்ரா பெளர்ணமி மாதத்தில் இதை செய்தால் போதும் கோடி பலன்களை அடைவீர்களாம்!
சித்திரை மாதம் என்பது உலகிற்கே ஒளியை தரும் மாதம் ஆகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி தினம் சித்ரா பௌர்ணமி என்று வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்த நாளில், தேவி வழிபாடு செய்வது தீயசக்தியில் இருந்து நம்மைக் காக்கும். அம்மன் கோயிலுக்குச் சென்று பெளர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தும் விலகும்.
சித்திரா பெளர்ணமியின் சிறப்பு
தமிழ் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரையில் பெளர்ணமி தான் சித்ரா பெளர்ணமி என அழைக்கப்படுகிறது. இந்த சித்திரை மாதம் வரும் பெளர்ணமி சித்ரகுபத்தனை வணங்கும் நாள்.
மதுரையில் மிகவும் சிறப்பாக அனுசரிக்கப்படும். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது.
மேலும், சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள், சித்ரா பெளர்ணமி அன்று சித்ரகுப்தனுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். பின்னர் சித்ரா பௌர்ணமி அன்று அம்பாள் வழிபாடு செய்வதால் திருமண யோகம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இன்று சித்ரா பௌர்ணமி... இந்த உணவுகளை மறந்தும் கூட சாப்பிடாதீங்க! ஆபத்து
தானம் செய்வது நல்லதா?
சித்திரா தினத்தில் சிவாலயங்களிலும் மிகவும் விசேஷமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதே போன்று வைணவ கோயில்கள் மற்றும் இதர தெய்வங்களின் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள், விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
இறைவனை வழிபட்டு உங்களால் முடிந்த தானம், தர்மங்கள் செய்வதால் உங்களுக்கு அனைத்து வித நன்மைகளும், சுபிட்சங்களும் ஏற்படும். இந்த சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்திரகுப்தனை வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நோய்நொடி இல்லாத வாழ்வும் பக்தர்கள் கிடைக்கப்பெறுவார்கள்.
அதிலும், சித்ரா பவுர்ணமி தினத்தன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்றுத்தரும்.