நடிகை சரண்யாவுடன் சித்ரா இறுதியாக பங்குபெற்ற நிகழ்ச்சி... ப்ரொமோ காணொளியால் வருத்தத்தில் ரசிகர்கள்
ரபல சின்னத்திரை நடிகையான சித்ரா இறுதியாக கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்போதும் இதிலிருந்து ரசிகர்கள் மீளா துயரில் இருந்து வருகின்றனர்.
இவரது தற்கொலைக்கு பின்பு பல காரணங்களும், சர்ச்சைகளும் உலா வந்துகொண்டே இருக்கின்றது.
ஆதலால் ரசிகர்களுக்கு பல கேள்விகள் எழுந்துள்ளது. இந்நிலையில் சித்ரா இறந்த ஒரு நாள் முன்பு அன்றைய இரவு 7 மணி அளவில் சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.
Final story of Chithra . . ????#chithuvj #PandianStores #vjchithra pic.twitter.com/B8mj41meTA
— Unknown (@Mysteri13472103) December 9, 2020
அதே சில சித்ரா இறந்த ஒரு நாள் முன்பு இரவு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் சின்னத்திரை நடிகை சரண்யாவுடன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு மகிழ்ச்சியாக பதிவு செய்யப்பட்ட செல்பி காட்சியினையும் பதிவிட்டிருந்தார்.
அதில் ஒரு வீடியோவில் மேடம் லவ் பண்ணதும் பண்ணாங்க, எப்போதும் போன் தான் எனக் கூறி சித்ராவை சரண்யா கிண்டலடிக்கும் காட்சிகளும் இடம் பெற்று இருந்தது.
தற்போது அந்நிகழ்ச்சியில் ப்ரொமோ காட்சியினை பிரபல ரிவி தற்போது வெளியிட்டுள்ளது. இதனை அவதானித்த ரசிகர்கள் மிகவும் வருத்தத்துடன் காணப்படுகின்றனர்.