மறைந்த சித்ராவை மறக்கமுடியாமல் ரசிகர்கள்... அஜித் பாணியில் செய்த மிக அரிய காட்சி
பிரபல சின்னத்திரை நடிகையான சித்ரா தற்போது உயிருடன் இல்லையென்றால் அவரை மறக்கமுடியாமல் ரசிகர்கள் அவரது காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த வருடம் டிசம்பர் 9ம் திகதி பிரபல தனியார் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார் நடிகை சித்ரா. இவருடன் இவரது கணவர் ஹேம்நாத் இருந்துள்ளார்.
இவரைத் தற்கொலைக்கு தூண்டியதாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.
இவரது மரணத்திற்கு சரியான காரணம் எதுவும் வெளிவராத நிலையில், இவரது புகைப்படங்கள் காணொளிகள் என வெளியிட்டு ரசிகர்கள் தங்களது சோகத்தினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சித்ராவின் மிக அரிய காணொளிகளை ரசிகர்கள் பதிவிட்ட வண்ணம் இருந்து வருகின்றனர். அந்த வகையில் அஜித் பாணியில் சித்ரா செய்த டிக்டாக் காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.