பழைய மெத்தையில் படுத்து உறங்குறீங்களா? மெத்தைக்கும் ஆயுள் இருக்குதாம்
நாம் வீட்டில் பயன்படுத்தும் பழைய மெத்தையை எப்பொழுது மாற்ற வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மெத்தை
இன்றைய காலத்தில் பெரும்பாலான வீடுகளில் மெத்தை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. குளிர் காலங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த தூக்கத்தை கொடுக்கின்றது.
ஆனால் சில தருணங்களில் மெத்தையில் படுத்தும் சரியான தூக்கம் இல்லாமல், முதுகுவலி வருவதும் உண்டு. இதற்கான காரணம் என்ன என்று நம்மில் பெரும்பாலான நபர்கள் யோசித்திருக்கவே மாட்டோம்.

மெத்தை நமது உடம்பிற்கு உதவியாக இருக்க வேண்டும். அதாவது தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் அழுத்தத்தினை குறைக்க உதவுகின்றது. ஆனால் சில ஆண்டுகள் ஆன பின்பு தசை மற்றும் மூட்டுகளில் பிரச்சனை, முதுகுவலி ஏற்படுகின்றது.
இதற்கு காரணம் மெத்தை மேடு பள்ளமாக இருப்பது தான். அதாவது மெத்தையில் உள்ளே இருக்கும் ஃபேம் அமுங்கி, ஸ்பிரிங்குகள் தன்மையை இழந்துவிடுகின்றது.

மெத்தையின் ஆயுள் எவ்வளவு?
நல்ல தூக்கத்திற்கு முதுகுத்தண்டு நேராக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். பழைய மெத்தை சரியான சப்போட் கொடுக்காமல் அடிக்கடி விழிப்பு ஏற்பட்டு ஆழ்ந்த தூக்கம் இல்லாமல் போய்விடுகின்றது.
அதுமட்டுமின்றி மெத்தைகள் பழையதாகிவிட்டால் அதில் தூசி, கண்ணுக்கு தெரியாத பூச்சிகள், அலர்ஜி ஏற்படுத்தும் கிருமிகள் மற்றும் ஈரப்பதம் சேரும்.

நாம் மெத்தையின் வெளிப்புறத்தில் பெட்ஷீட் பயன்படுத்தினாலும், இவை நாளடைவில் உள்ளே சென்று தோல் அலர்ஜி, சுவாச பிரச்சனை ஏற்பட்டு தூக்கத்தை கெடுக்கும்.
நமது தூக்கத்திற்கும், மெத்தைக்கும் இவ்வளவு நெருக்கம் இருப்பதை பலரும் அறியாமல் உள்ளனர். ஆதலால் மெத்தையின் ஆயுட்காலத்தினை யாரும் பெரிதாக கண்டுகொள்வதுமில்லை.
ஆகவே பழைய மெத்தையை மாற்றுவது உங்கள் தூக்கத்திலும், ஆரோக்கியத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |