திருமணமான 2 வருடத்தில் இறந்த மருமகன்... அரிய புகைப்படத்துடன் நடிகர் அர்ஜுன் பதிவிட்ட வலியான வரிகள்
கன்னட திரைப்பட நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் நினைவு நாளில் நடிகர் அர்ஜுன் மனவருத்தத்துடன் அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் அர்ஜுனின் உறவினரான கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா கர்நாடக மாநிலம் பெங்களூரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கடந்த வருடம் ஜுன் 7ம் திகதி மாரடைப்பினால் திடீரென மரணமடைந்தார்.
சிரஞ்சீவி சார்ஜாவும், அவரது மனைவி நடிகை மேக்னா ராஜும் 10 ஆண்டுகளாக காதலித்து கடந்த 2018ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணமான 2 ஆண்டுகளில் மனைவி கர்ப்பமாக இருந்த சூழ்நிலையில் இவ்வாறு மாரடைப்பினால் காலமானது ஒட்டுமொத்த திரையுலகினையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இன்றுடன் சிரஞ்சீவி இறந்து ஒரு வருடம் ஆகிய நிலையில், அவரது உறவினரான நடிகர் அர்ஜுன், சிரஞ்சீவியுடன் இருக்கும் சில அரிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்துடன், ஒரு வருடம் ஆகிவிட்டது, ஆனால் நான் உன்னை வாழ்நாள் முழுவதும் பிரிந்து வருந்துகிறேன் சிறு மகனே.. அந்த நிலையான சந்தோஷ புன்னகை நீ எங்கிருந்தாலும் துடைக்காது என நம்புகிறேன்... என்று வருத்தத்துடன் சில வரிகளையும் பதிவிட்டுள்ளார்.