வரமிளகாய் உடைத்து போட்ட சிந்தாமணி சிக்கன் - அசத்தும் சுவையில் இப்படி செய்ங்க
பலருக்கும் சிக்கன் என்றால் பிடிக்கும். சிக்கனை வைத்து ஏகப்பட்ட பல ரெசிபிகள் நாம் செய்தும் சாப்பிட்டு இருப்போம். ஆனால் சிந்தாமணி சிக்கன் செய்து சாப்பிட்டு பார்த்துள்ளீர்களா? இது கொஞ்சம் வித்தியாசமான சுவையில் செய்வார்கள்.
கோயம்புத்தூர் மக்களுக்கு மிகவும் பிடித்தமான உணவுகளில் இந்த சிந்தாமணி சிக்கன் மிகவும் பிரபலமானது. அந்த மக்கள் தயிர் சாதத்திற்கு இதை சைட்டிஷ் அக எடுத்து கொள்வார்களாம்.
இதில் மசாலா பொடி எதுவும் சேர்க்காமல் காரம் மட்டும் தூக்கலாக இருக்கும். அதற்கு காரணம் அவர்கள் சேர்க்கும் மிளகாய் தான். இதை நீங்களும் சுவைக்க வேண்டும் என்றால் ரெசிபியை தந்துள்ளோம் பாருங்கள்.
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி – 1.1/2 கிலோ
- கடலை எண்ணெய் – 50 மிலி
- கறிவேப்பிலை – தேவையான அளவு
- சின்ன வெங்காயம் – 250 கிராம்
- சிவப்பு மிளகாய் – 150 கிராம்
- உப்பு – தேவையான அளவு
- பூண்டு – 10
- தக்காளி – 2
- தேங்காய் துண்டுகள் – 2 கைபிடி அளவு
- சீரகம் – 2 ஸ்பூன்
- நல்லெண்ணெய் – 5 ஸ்பூன்
செய்முறை
சிக்கன் சிந்தாமணிக்கு எகந்தது மண் சட்டி தான். எனவெ அதை அடுப்பில் வைத்து சூடாக்கி கடலை எண்ணெய் ஊற்றி சூடுப்படுத்தவும்.
பின்னர் அதில் காம்பு மற்றும் விதை நீக்கிய காய்ந்த மிளகாயை உடைத்து போட்டு வறுக்கவும். அடுத்து அதில் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் இடித்த பூண்டையும் செர்த்து கொள்ளவும். பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிய பின்னர் அதனுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துள்ள சிக்கனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து விட்டு, காரமும் சரியாக இருக்கிறதாக என ஒருமுறை சுவைத்து பார்க்கவும். பின்னர் தண்ணீர் சேர்த்து சிக்கனை நன்றாக வெக வைக்கவும்.
இப்போது தேங்காய் துண்டுகள், இடித்த சீரகம் சேர்த்து நன்கு கிளறவும். மீண்டும் 15 நிமிடத்திற்கு சிக்கனை சுண்ட வேக விடவும். இறுதியாக நல்லெண்ணெய் சேர்த்து கறிவேப்பிலையை தூவவும்.
பின்னர் அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட பரிமாறலாம். இதை சாதம் தோசை தயிர் சாதம் போன்றவற்றுடன் சொத்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
