வீட்டில் Chicken இருக்கா? அப்போ இந்த தடவை சிந்தாமணி Chicken செய்ங்க
விட்டில் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் சிக்கன். இதை பல விதமாக செய்து சாப்பிடலாம். சிக்கனில் எந்த ரெிசிபி செய்தாலும் அது சுவைக்கு குறையாத அளவில் பிரமாதமாக இருக்கும்.
அந்த வகையில் இந்த பதிவில் பார்க்க இரருக்கும் சிக்கன் ரெசிபி கோவை, ஈரோடு பகுதிகளில் பிரபலமான சிந்தாமணி சிக்கன் செய்முறை தான்.
இது சாப்பிடுவதற்கு அவ்வளவு நன்றாக இருக்கும். இந்த பதிவில் கோவை, ஈரோடு சிந்தாமணி சிக்கன் செய்முறை எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்.
சிந்தாமணி சிக்கன் செய்ய தேவையானவை
- நாட்டு கோழி
- சின்ன வெங்காயம்
- மிளகு தூள்
- நல்லெண்ணெய்
- உப்பு
- இஞ்சி
- பூண்டு பேஸ்ட்
- கறிவேப்பிலை
- காய்ந்த மிளகாய்
- சோம்பு
- எலுமிச்சை
செய்முறை
கடாயில் ஐந்து ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் சோம்பு போட வேண்டும். இதனுடன் 20 சின்ன வெங்காயத்தை பொடிதாக நறுக்கி சேர்க்கவும்.
சின்ன வெங்காயத்தின் நிறம் மாறியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் இரண்டு ஸ்பூன் சோக்க வேண்டும். இது பச்சை வாசனை போன பின்னர் விதை நீக்கிய 10 காய்ந்த மிளகாய்களை பாதியாக உடைத்து போடுங்கள்.
பின்னர் அரை கிலோ நாட்டுக்கோழியை மஞ்சள் சேர்த்து தண்ணீரில் நன்கு கழுவி இதில் போட வேண்டும். சிக்கன் போட்ட பின்னர் அடுப்பில் தீயை குறைத்து விட வேண்டும்.
இதனுடன் கூடுதலாக இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்துவிடவும். சிக்கன் நன்றாக வேக வேண்டும். இந்த கலவையை நன்றாக மிக்ஸ் செய்து கொண்டே இருக்க வேண்டும். ஒரு முறை மட்டும் சிக்கன் மீது தண்ணீர் தெளிக்கவும்.
சிக்கன் வெந்த பின்னர் இரண்டு ஸ்பூன் மிளகு தூள் சேருங்கள். காய்ந்த மிளகாயின் காரம் இதற்கு நல்ல சுவையை தரும்.
இறுதியில் கொத்தமல்லி தூவி விட்டு கால் வாசி எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுங்கள். அதற்கு மேல் சிக்கனை எதுவும் செய்யக்கூடாது. இப்போது அடுப்பை விட்ட இறக்கினால் சிந்தாமணி Chicken தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |