புகைப்படத்தினை வெளியிட்டு காதலன் செய்த செயல்! பிரபல நடிகை உடைத்த உண்மை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சின்னமருமகள் சீரியலில் கதாநாயகி கோபமான பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்வேதா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சின்ன மருமகள் சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் ஸ்வேதா. ஆதி என்பவர் இவரது காதலர் என கூறிக்கொண்டு சமீபத்தில் பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.
மேலும் ஸ்வேதா உடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு, தான் ஸ்வேதாவின் கணவர் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இப்புகைப்படம் தற்போது பயங்கர வைரலாகியது. மேலும் ஸ்வேதாவும் அவருடன் நெருக்கமாக சிரித்த முகத்தில் போஸ் கொடுத்துள்ளதைப் பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தற்போது ஸ்வேதா தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவன் தனது கணவரும் கிடையாது, காதலரும் கிடையாது என்றும் அவன்மீது வழக்கு இருப்பதாகவும், போலிசார் தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாங்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறியதுடன், தற்போது ஒன்றாக இருப்பது போன்று பொய்கூறி இவ்வாறு பேட்டி கொடுத்து தனது வாழ்க்கையினை கெடுக்க பார்ப்பதாக கூறியுள்ளார். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக ஸ்வேதா பதிவிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |