எங்க அப்பா அப்படிப்பட்டவர் தான்! வைரமுத்துவின் மகன் இப்படி சொன்னாரா?
கவிஞர் வைரமுத்துவுக்கு ஓஎன்வி விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதும், பலத்த எதிர்ப்பு கிளம்ப, அந்த விருதை திரும்ப வழங்குவதாக அறிவித்துவிட்டார்.
இதற்கு காரணம் சின்மயி தான் என்றும், PSBB வழக்கை திரும்ப பெறவே இவ்வாறு செய்கிறார் என்றும் கூறப்பட்டது.
இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “வைரமுத்துவுக்கு ஓ.என்.வி விருது வழங்கக்கூடாது என்று நான் மட்டுமல்ல, தேசியளவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கேரளாவில் இருக்கும் ’வுமன் சினிமா கலெக்ட்டிவ் (wcc) அமைப்பினரும் எங்கள் பக்கம் நின்றார்கள்.
தொடர்ச்சியான எதிர்ப்பால் ’விருது மறுபரிசீலனை செய்யப்படும்’ என்று அறிவித்தது ஓ.என்.வி கல்சுரல் அகாடமி. அப்போதே, விருது கொடுக்கமாட்டார்கள் என்பது தெளிவாகிவிட்டது.
ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக நடந்துகொள்கிறார் வைரமுத்து. ஓ.என்.வி விருதை கொடுத்திருந்தால் கேரள அரசிற்கே அவமானம் ஆகியிருக்கும். அவர்களே ‘நீங்களே திருப்பியளிக்கிறேன்’ என்று சொல்லிவிட சொல்லும்போது, வராத விருதையும், வராத பணத்தையும் திருப்பிக் கொடுக்கிறேன் என்கிறார்.
அந்தப் பணத்தோடு, 2 லட்ச ரூபாய் நிவாரண நிதி வேறு அளிக்கிறார். எல்லாவற்றையும் பணத்தால் அடித்து மறைக்க நினைக்கிறார். ’கலைஞனையும் படைப்பையும் பிரித்து வைத்துப் பார்க்கவேண்டும்’ என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
கருவாச்சி காவியத்துக்கு கை, கால்கள் முளைத்தா போய் விருது வாங்குகிறது? வைரமுத்துதானே வாங்குகிறார்?” என தெரிவித்துள்ளார்.
மேலும், “வைரமுத்து ஒரு பாலியல் குற்றவாளி என்பதால் நான் கடைசிவரை வைரமுத்துவை எதிர்த்துக்கொண்டேதான் இருப்பேன். வெளிப்படையாக வந்து மன்னிப்பு கேட்டு, இவரால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் அளிக்கச் சொல்லுங்கள். எனக்குக்கூட வேண்டாம்.
இதற்கான, நான் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை.தமிழ் இல்லையென்றாலும் நான் நல்லாவே பிழைப்பேன். எனக்கு நல்ல டேலன்ட் இருக்கு.
தமிழ்நாட்டை தாண்டினால் வைரமுத்துவை யாருக்கும் தெரியாது. தமிழ்நாட்டை தாண்டினால் சின்மயியை யாருன்னு தெரியும்.
மராட்டிய மொழியில் மராத்திய வரலாற்றிலேயே எப்போதும் இடம் பிடிக்கும்படியான சூப்பர் ஹிட் அடித்தது நான் பாடிய பாட்டு.அந்தப் பாட்டுக்கு ஃபிலிம் பேர் விருதுகூட கிடைத்தது. அவர்களுக்குக் கூட என்னை யார்னு தெரியும். ஆனால், வைரமுத்துவை தெரியுமா?
இவர், பேரை சொல்லி எனக்கு பப்ளிசிட்டி வேண்டும் என்றால், இவர் பெயரை நான் எதற்கு இழுக்க வேண்டும்?
இந்தியளவில் தெரிந்த பெரிய பிரபலத்தை சொல்லியிருக்கலாமே? வைரமுத்து போன் செய்து மன்னிப்பு கேட்கிறேன் என்று என்னிடம் சொன்னதற்கு ஆதாரம் இருக்கிறது.
நான் மட்டுமல்லாமல் பலர் சொல்லியுள்ளார்கள்.மன்னிப்பை வெளிப்படையாக கேட்கவேண்டும். அதுதான், எங்களுக்கு முக்கியம். வைரமுத்து மீது வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்டப் பெண்கள் குற்றச்சாட்டு சொல்லியிருக்கும்போது சின்மயியை வைத்து மட்டும் ஏன் டார்கெட் செய்யவேண்டும்?”.
”கார்க்கியே ’எங்க அப்பா அப்படித்தான். ஏற்கனவே, நானும் கேள்விவிப்பட்டிருக்கேன்' என்றார். இப்போ, இல்லை என மறுப்பதாக தெரிவித்துள்ளார்.