தண்ணீரில் 40.74 கி.மீ. பைக் பயணம் - வியக்க வைத்த கின்னஸ் சாதனை!
தண்ணீரில் இருசக்கர வாகனத்தை ஓட்டி 40.74 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து சீனாவைச் சேர்ந்த வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் ஒருவர் புதிய கின்னஸ் உலக சாதனையைப் படைத்துள்ளார்.
சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள மாயங் மியா பகுதியில், ZX Moto என்ற வாகனத் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் இந்தச் சாதனை முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனை
இதில், அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஷாங் ஷு, சிறப்பாக மறுவடிவமைக்கப்பட்ட இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி தண்ணீரில் 40.74 கிலோமீட்டர் தூரம் பயணித்தார்.
இதன் மூலம், திறந்தவெளி வாகனத்தில் தண்ணீரில் அதிக தூரம் பயணித்தவர் என்ற கின்னஸ் உலக சாதனையை அவர் தன்வசப்படுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர், தண்ணீரில் 31 கிலோமீட்டர் தூரம் பயணித்ததே சாதனையாகப் பதிவாகியிருந்தது. அந்தச் சாதனையை முறியடிக்க ஷாங் ஷு சுமார் 17 ஆண்டுகளாக முயற்சி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
நீண்டகால முயற்சிக்குப் பின்னர், அவர் முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். தண்ணீரில் இருசக்கர வாகனத்தை இயக்கி இவ்வளவு நீண்ட தூரத்தைக் கடந்துள்ள இந்த முயற்சி, வாகனத் தொழில்நுட்ப ஆர்வலர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
A motorcycle riding on water! Chinese rider Zhang Xue just smashed the Guinness World Record. He rode his modified MX450 bike 40.74 km across open river, beating the old record of 31.8 km. Now he made it happen on his hometown river in Mayang, Hunan. https://t.co/Hks9dwhTl1
— Boden | China Views (@BodenViews) October 25, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |