கடல் மணலில் எழுதி பணம் சம்பாதிக்கும் சீனப் பெண்
கோவிட் பெருந்தொற்று பணவீக்கம் போன்ற பல காரணிகளினால் உலகின் பல நாடுகளில் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொள்வதும் தங்களது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதும் பெரும் சவாலுக்குரிய விடயமாக மாறியுள்ளது.
எனினும் சீனாவில் ஒரு பெண் அண்மையில் தனது தொழிலை ராஜினாமா செய்துவிட்டு தனக்கு விருப்பமான வேறு ஒரு தொழிலில் இணைந்து கொண்டுள்ளமை அதிகமாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இந்தப் பெண் விற்பனை துறையில் பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
விற்பனை துறை சார் பதவியை துறந்து கடல் கரையில் தகவல்களை எழுதுவதனை ஓர் தொழிலாக செய்து வருகின்றார்.
இரண்டு பிள்ளைகளின் தாயான பெண் இந்த சீனப் பெண் ஹைணன் பிராந்தியத்தை சேர்ந்தவர்.
தனது ஓய்வு நேரத்தில் குறித்த பின் கடல் கரையில் மணலில் எழுதி அவற்றை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றி வருகின்றார்.
அதிர்ஷ்டவசமாக இந்த தொழிலுக்கு பலர் வரவேற்பினை தெரிவித்துள்ளனர். பல்வேறு வாடிக்கையாளர்களும் இவருக்கு சந்தர்ப்பம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
விற்பனை துறையில் பணியாற்றியபோது கிடைக்கப்பெற்ற வருமானத்தை விட கூடுதல் வருமானத்தை தாம் உழைப்பதுடன் அதிக நேரம் குடும்பத்துடன் செலவிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என அவர் குறிப்பிடுகின்றார்.
நாளொன்றுக்கு எட்டு மணித்தியாளங்கள் பணியாற்றினால் இந்திய மதிப்பின்படி ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானத்தை ஈட்டமுடியும் எனவும் அது தனது தேவைக்கு போதுமானது எனவும் சீனப் பெண் தெரிவிக்கின்றார்.