வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்போ இந்த 5 பொருட்களை வைங்க
China Feng Shui: சீனாவில் பிரபலமான ஃபெங் சூயி என்ற பாரம்பரிய நம்பிக்கையைக் குறித்தும், அதிர்ஷ்டத்தினை குறித்தும் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
இந்தியாவில் வாஸ்து சாஸ்திரம் எப்படியோ அதைப் போன்று தான் சீனாவில் ஃபெங் சூயி. இவை வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கவும் வாழ்க்கையை செழிப்பாகவும், நிதி நிலையை மேம்படுத்தவும் வைக்கின்றது. ஃபெங் சூயி-யின் படி வீட்டில் எந்தெந்த பொருட்கள் அதிர்ஷ்டத்தை அளிக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிர்ஷ்டத்தை தரும் பொருட்கள்
வீட்டில் சிரிக்கும் புத்தர் சிலையை தென்கிழக்கு திரையில் வைக்க வேண்டும். இவை நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், செல்வத்தினை மேம்படுத்தி, பணத்தை பல மடங்கு பெருக்கவும், மகிழ்ச்சியையும் கொடுக்கின்றது.

ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி வீட்டின் வாசலில் காற்று மணிகளை வாங்கி தொங்கவிடுவது முக்கியமாக இருக்கின்றது. இவ்வாறு தொங்கவிடும் போது, காற்றின் மூலம் எழுப்பப்படும் ஒலி வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், செல்வ செழிப்போடும் வைக்கின்றது. முக்கியமாக பிரதான கதவுகள், ஜன்னலுக்கு அருகில் தொங்கவிட வேண்டும்.

இதே போன்று இந்த சாஸ்திரத்தில் ஆமையின் சிலை மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு இவற்றினை கொடுக்கும் மங்களரமான பொருளாகக் கருதப்படுகின்றது. உலோகத்தில் உள்ள ஆமையை வாங்கி வைப்பதால், வாஸ்து குறைபாடு நீங்குமாம். குடும்ப நபர்களின் ஆரோக்கியம் மேம்படுவதுடன், எதிரியையும் வெல்ல முடியுமாம். அதுட்டுமின்றி வீட்டில் செல்வம் அதிகரிக்க கண்ணாடி ஜாடியில் நீரை நிரப்பி அதில் வைக்க வேண்டும்.

ஃபெங் குயி என்ற சீன நாணயங்கள் நேர்மறை ஆற்றலையும், செழிப்பையும் அளிக்குமாம். அதாவது வீட்டின் நுழைவாயிலில், தொங்கவிடும் விடுவதால் வறுமை நீங்கி செல்வத்தை கொண்டு வரும். மேலும் தொழிலிலும் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் ட்ராயரில் 10 நாணயங்கள் கொண்ட தொகுப்பை வைக்கவும்.

மேலும் ஃபெங் குயி படி, வீட்டில் மூங்கிள் செடியை வைத்திருப்பதும் மங்களரமானதாக கருதப்படுகின்றது. வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டுவருவதுடன், மகிழ்ச்சி, செல்வம், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தினை கொண்டுவரும் என்று நம்பப்படுகின்றது..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |