கட்டு கட்டாக பணக்கட்டுகளை போனஸாக கொடுத்த கம்பனி: எண்ணிப்பார்க்கவே இரண்டு நாளாகுமாம்!
பொதுவாக சில கம்பனிகளில் வருடா வருடம் அல்லது வருவாய் அதிகரிப்பு போன்ற காரணங்களால் ஊழியர்களுக்கு போனஸ் கொடுப்பது வழக்கம்.
போனஸ் கொடுத்தா எவ்வளவு ரூபா கொடுப்பார்கள். அதுவும் கொரோனா பாதிப்பு இயற்கை அனர்த்தம் என பல இன்னல்களை சந்திருக்கும் வேளையில் ஒரு கம்பனி மாத்திரம் மலை மலையாக பணக்கட்டுக்களை போனாஸாக வழங்கிய சம்பவம் அனைவரும் அதிர்ச்சியடைந்திருக்கிறார்கள்.
ஊழியர்களை மகிழவைத்த போனஸ்
சீனாவில் ஹெனன் மைன் நிறுவனமானது கடந்த ஆண்டில் 23 சதவிகிதத்தில் அதிகரித்திருந்தது.
இந்நிறுவனத்தின் மொத்த வருமானமானது 9.16 பில்லியன் யுவான் ஆகும். அதாவது 1.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இந்த வருமானத்தால் திகைத்துப்போன நிறுவனம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் அந்த மகிழ்ச்சியை ஊழியர்களும் அனுபவிக்க வேண்டும் எனநினைத்து அதற்காக ஒரு நிகழ்ச்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்ச்சியில் ஊழியர்களை ஆச்சரியப்பட வைக்கும் வகையில் 60 மில்லியன் யுவான் அதாவது 72.48 கோடி ரூபாயை மலைப்போல் போனஸை அள்ளி வழங்கியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் 30 சதவிகிதம் சம்பள உயர்வும் வழங்கியிருக்கிறார்கள்.
இந்த சம்பவம் சீனாவில் மாத்திரமல்ல அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.