சீனா விமான விபத்து - 2-வது கருப்பு பெட்டியும் கண்டுப்பிடிப்பு - அமெரிக்காவுக்கும் தொடர்பா?
கடந்த நாட்களுக்கு முன்பு சீனாவில் மலைப்பகுதியில் ஏர்லைன்ஸ் போயிங் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இதில், 132 பேர் பயணித்ததில், இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 132 பேரும் உயிரிழந்தனர்.
முதல் கருப்பு பெட்டி
சுமார் 29 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. விமானம் கிழக்கு சீன பகுதியான குவாங்ஷோவை நோக்கி பறந்த போது தரையிரங்க முற்றப்பட்டபோது மலையில் மோதி விபத்தாகியது.
தனுஷுன் அண்ணன் விஷயத்திலேயே தோல்வியை சந்தித்த ரஜினி - இனி செய்யப்போவது என்ன?
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு விமானத்தின் முதல் கருப்பு பெட்டியானது கண்டுப்பிடிக்கப்பட்டது. ஆனால், அந்த கருப்பு பெட்டி மிகவும் சேதமடைந்ததால், அதில் உள்ள விவரங்களை சேகரிப்பது சவாலான காரியம் என கூறப்பட்டது.
இரண்டாவது கருப்பு பெட்டி
இருந்தாலும், அதில் பதிவான விவரங்களை ஆய்வு செய்யும் பணிகள் பீஜிங்கில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனிடையே, விபத்து நடைப்பெற்ற போது, சோதனையில் இரண்டாவது கருப்பு பெட்டியும் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது கருப்பு பெட்டி தரையில் இருந்து சுமார் ஐந்து ஆடி ஆழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வரும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை
கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது கருப்பு பெட்டியும் பீஜிங் நகரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு உள்ளது. மேலும், போயிங் 737-800 விமானம் ஆனது அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்பட்டதால், அமெரிக்காவும் ஆய்வில் பங்கேற்க சீனா அழைப்பு விடுத்துள்ளது.
இதனால், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் அமெரிக்கா மற்றும் சீனா அதிகாரிகளுடன் விசா மற்றும் கொரோனா விதிகள் தொடர்பான விவகாரங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளன.
Chines #Boeing 737 plane crashed in southern #China with more than 130 people on board. #ChinaPlaneCrash #Boeing737 pic.twitter.com/gcvFh7DepG
— Wali Khan (@WaliKhan_TK) March 21, 2022