தனுஷுன் அண்ணன் விஷயத்திலேயே தோல்வியை சந்தித்த ரஜினி - இனி செய்யப்போவது என்ன?
நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து சம்பவம் அடிக்கடி இணையத்தில் ஏதாவது ஒரு தகவல் உலா வரும் நிலையில், இருவரும் இதைப்பற்றி இதுவரை எதுவும் கூறாமல் இருந்து வருகின்றனர்.
மேலும், இவர்கள் சண்டையினால் தான் இந்த முடிவை எடுத்துள்ளார்கள். விரைவில் ஒன்றிணைவார்கள் எனக்கூறப்படுகிறது.
ஆனால், ரஜினிகாந்திற்காக ஐஸ்வர்யா சம்மதம் தெரிவித்தாலும் தனுஷ் அதற்கு எல்லாம் செவி சாய்க்காமல் விடாப்படியாக இருக்கிறாராம்.
ரஜினியின் முதல் தோல்வி
ஏற்கனவே, ரஜினிகாந்த் சோனியா அகர்வாலும், செல்வராகவனும் விவாகரத்து பெற முடிவு செய்தபோது அவர்களின் மனதை மாற்ற முயற்சி செய்தார்.
குடும்பம் தான் முக்கியம் எனக்கூறியும், ரஜினி சொல்வதை கேட்காமல் செல்வராகவன் சோனியா அகர்வாலும் பிரிந்தனர்.
அப்போதே முதல் விஷயத்தில் ரஜினி தோல்வியை சந்தித்தார். தற்போது மகள் விஷயத்தில் எவ்வளவு எடுத்துக்கூறினாலும், பேச்சுக்கள் தோல்வியையே சந்திக்கிறார்கள்.
இரண்டாவது தோல்வியா?
தனுஷ், ஐஸ்வர்யாவிடம் பேசாவிட்டாலும், மகன் இருவரையும் கூட்டிக்கொண்டு வெளியே சுற்றுவதும், புகைப்படம் எடுப்பதும் இணையத்தில் வெளியாகின்றன.
எனவே இருவரும் சிறிய இடைவேளிக்கு பின், இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பார்கள் எனக்கூறப்படுகிறது.
