மீண்டும் சீனாவில் தலைவிரித்தாடும் கொரோன தொற்று! பள்ளிகளை மூட உத்தரவு!
கொரோனா வைரஸ் ஆனது முதன் முறையாக சீனாவில் ஆரம்பித்து உலகமெங்கும் பரவியது. மெல்ல மெல்ல தடுப்பூசியின் பயனால் பல நாடுகளில் குறைந்து வந்த நிலையில், தற்போது, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் கொரோனா வேகம் எடுக்க தொடங்கியுள்ளது.
இந்த நிலையில், சீனாவில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக அதிகமான தொற்று பாதிப்பை சந்தித்துள்ளது. பெரும்பாலும் சீனாவின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் அதிகரித்துள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடு நடவடிக்கைகளை பலப்படுத்தி உள்ளது.
மேலும், சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100-க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது.