மனிதர்களையும் மிஞ்சிய குரங்கு...! சோப்பு போட்டு துணி துவைக்கும் சிம்பன்ஸி
சிம்பன்சி என்பது வாலில்லா ஒரு மனிதக் குரங்கு இனம். பல மரபியல் ஆய்வு முடிவுகள் சிம்பன்சியே மனிதனுக்கு மிக நெருங்கிய இனம் எனக் கூறுகின்றன.
வெவ்வேறு ஆய்வு முடிவுகளிடையே சிறிய வேறுபாடுகள் இருப்பினும், மனிதரிலுள்ள 95-99% டி.என்.ஏ சிம்பன்சிகளில் டி.என்.ஏ யை ஒத்திருப்பதாக அறியப்படுகின்றது.
இவை மனிதனை ஒத்திருந்தாலும், உருவில் சற்று சிறியதாக இருக்கும். உயரத்தில் சுமார் 1 மீ (3-4 அடி) இருக்கும். மனிதனோடு இவையும் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் சேரும் என உயிரின வகையாளர்கள் கருதுகிறார்கள். இவை ஆப்பிரிக்காவில் மேற்குப் பகுதிகளிலும், நடுப் பகுதிகளிலும் வாழ்கின்றன.
சிம்பன்சிகள் மிகவும் அறிவார்ந்த விலங்குகள். மிக விரைவாக மனிதர்கள் செய்யும் செயல்களை பின்பற்றி வாழும்.
தற்போது சிம்பன்சி ஒன்று மனிதனைப் போல் துணி துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று நீரோடையில் தனது துணிகளை துவைக்கின்றது. மஞ்சள் நிற டி-ஷர்ட்டை சோப்பு போட்டு துவைத்து நீரோடையில் அலசும் வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.