குழந்தையின் மூளை கணினி போல் இயங்க வேண்டுமா? இந்த 5 உணவுகள் ரொம்ப முக்கியம்
இன்றைய குழந்தைகள் மிகவும் அட்வான்ஸுடன் இருந்து வருகின்றனர். படிப்பு விளையாட்டு என்று எதுவாக இருந்தாலும் பயங்கர சுட்டியாகவே மாறியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் புத்திசாலியாக இருப்பதையே விரும்புவார்கள். அவ்வாறு குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிப்பதற்கு சில உணவுகள் பெரிதும் உதவி செய்கின்றது.
குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் உணவுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
முட்டை
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் முட்டைகள் அவசியம். இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், லுடீன், கோலின் மற்றும் துத்தநாகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் குழந்தையின் மூளைத் திறனை அதிகரிக்கிறது. கவனசிதறல் ஏற்படாமல் மனதை ஒருமுகப்படுத்துகிறது.
மேலும் முட்டை, கோலிக் அசிடைல்கோலின் அல்லது மெமரி ஸ்டெம் செல்களை, அதாவது நினைவுத் திறனுக்கான செல்களை உருவாக்க உதவுகிறது. எனவே முட்டைகளை சாப்பிடுவது குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்துகிறது.
மீன்
குழந்தைகளின் புத்தியை கூர்மையாக்க மீன் அவசியம். சால்மன், டுனா மற்றும் கானாங்கெளுத்தி போன்ற போன்ற மீன்களில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மூளை திசுக்களை உருவாக்க உதவுகிறது. ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களின் பல நன்மைகள் உள்ளன.
முழு தானியங்கள்
முழு தானியங்கள் குழந்தைகளின் மூளைக்கு நிலையான ஆற்றலைக் கொடுக்கும். இது இரத்த நாளங்களில் உள்ள குளுக்கோஸை மெதுவாக வெளியிடுகிறது.
இதன் காரணமாக, குழந்தையின் உடலில் நாள் முழுவதும் நீடித்த ஆற்றல் இருக்கும். மூளையின் சரியான செயல்பாட்டிற்கு தேவையான ஃபோலிக் அமிலமும் இதில் உள்ளது.
ஓட்ஸ்
ஓட்ஸில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் வைட்டமின் பி அதிக அளவில் காணப்படுகிறது. ஓட்ஸ் உணவில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், குழந்தையின் உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. குழந்தைகளுக்கு காலை உணவாக ஓட்ஸ் உண்பது மூளையின் செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது.
மூளை வளர்ச்சிக்கான சில காய்கறிகள்
கீரை, வாழைப்பழம், ப்ரோக்கோலி மற்றும் இதர பச்சை நிற காய்கறிகள் புத்தி கூர்மையை மேம்படுத்த உதவும். தக்காளி போன்ற வேறு சில காய்கறிகள் இன்னும் சிறந்தது.
புளுபெர்ரி, ராஸ்பெர்ரி மற்றும் ப்ளாக்பெர்ரி ஆகியவை ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ளன, இது மூளையின் ஆரோக்கியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.