குழந்தையை தொட்டிலிலேயே தூங்க வைங்க
குழந்தைகள் இருக்கும் வீடு எப்பொழுதுமே தனி கலையுடன் இருக்கும். அந்த வகையில் குழந்தையின் தூக்கம் என்பது அதன் ஆரோக்கியத்துடன் தொடர்புபட்டது.
சிலர் குழந்தைகளை தொட்டிலில் தூங்க வைப்பார்கள். இன்னும் சிலர் தங்கள் அருகிலேயே தூங்க வைப்பார்கள்.
இன்னும் சில பெற்றோர் இரவு நேரங்களில் குழந்தைகளை தங்கள் மார்பில் தூங்க வைக்கிறார்கள். இது பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான ஒரு பிணைப்பை ஏற்படுத்தும் என்பது உண்மைதான்.
image - emma's diary
ஆனால், பகல் வேளைகளில் இது சரியாக இருக்கும். ஆனால், இரவு வேளைகளில் இவ்வாறு குழந்தைகளை மார்பில் தூங்க வைப்பது அவ்வளவு சரியான முறை கிடையாது.
ஏனென்றால் இது குழந்தைக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். ஏனென்றால் பெற்றோர் தங்கள் விருப்பத்துக்கேற்ப வலது,இடது என திரும்பிப் படுப்பார்கள்.
அவ்வாறு குழந்தையையும் திருப்பி படுக்க வைப்பது அவர்களின் உடல் நலனுக்கு நல்லதல்ல. மூச்சுத் திணறல்கூட ஏற்படும் வாய்ப்புகூட காணப்படுவதாக கூறப்படுகிறது.
image - red nose australia
அமெரிக்காவில் குழந்தைகள் நல மருத்துவமனையில் நடத்திய ஆய்வில், கடந்த 15 மாதங்களில் பாதுகாப்பற்ற முறையில் தூங்கிய சுமார் 30 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
அதில் பெரும்பாலானவர்கள் பெற்றோர் அருகில் தூங்கியவர்கள். குழந்தைகளை அருகில் தூங்க வைக்கும்போது ஆடைகளால் அ தன் முகத்தை மறைத்தல், நெருங்கி படுக்க வைக்கும்போது சுவாசிக்க முடியாமல் செல்லுதல் என்பன இறப்புக்கு காரணமாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தொட்டிலில் தூங்க வைப்பதுதான் சரியான முறை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதுவே குழந்தைகளின் நிம்மதியான உறக்கத்துக்கு வழிவகுக்கும்.
image - the asiant parent philipians