ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? அப்போ இந்த உணவை இரவில் சாப்பிடாதீங்க
தூக்கம் என்பது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானதாகும். தூக்கமின்மையால் நீரிழிவு, தைராய்டு, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.
நமது மனநிலையை காக்கவும், நோய் எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கவும் நாள் ஒன்றிற்கு 7 முதல் 9 மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியமாகும்.
தூக்கத்தை கெடுக்கும் உணவுகள்
கவலை மற்றும் மனச்சோர்வுகளை நீக்கும் தேநீர் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் வலுப்பெறுகின்றது. தூக்கமின்மை பிரச்னை உள்ளவர்கள் தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
மக்னீசியம் சத்துக்கள் நிறைந்து இருக்கும் வாழைப்பழத்தில், டிரிப்டோபான் என்ற பொருள் தூக்கத்துக்கு வழிவகுப்பதால், இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது சிறந்ததாகும்.
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருக்கும் அக்ரூட் பருப்புகள் தூக்கத்திற்கு நன்கு உதவுகின்றதாம். ஆதலால் வால்நட்டை உணவில் சேர்த்துக் கொண்டால் தூக்க பிரச்சினை ஏற்படாமல் இருக்கும்.
இதே போன்று தூங்கும் முன்பு வெதுவெதுப்பான பால் அருந்திவிட்டு படுத்தால், நல்ல ஹார்மோன்கள் செயல்படுவதுடன் மன அழுத்தம் பிரச்சினை நீங்கி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கின்றது.
தூக்கம் வருவதற்கு என்ன செய்ய வேண்டும்?
டிவி பார்ப்பது கேம்ஸ் விளையாடுவது ஆகியவற்றையும் படுக்கும் முன் தவிர்க்க வேண்டும். நன்றாக தூக்கம் வருவதற்கு சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யலாம்.
படுக்கையில் படுத்து கொண்டு டிவி பார்ப்பதும் புத்தகம் படிப்பதுமாக இருந்தால் தூக்கம் வராது. எனவே தூக்கம் வரும் போது படுக்கையில் படுக்க வேண்டும்
படுக்கை அறையில் முடிந்தவரை வெளிச்சத்தை தவிர்க்க வேண்டும். குறைவான வெளிச்சம் இருந்தால் நல்லது
படுக்கையறையை சுற்றி நல்ல சுத்தமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொண்டால் தூக்கம் கண்டிப்பாக வரும்.