வெளிநாடுகளில் பள்ளிக் குழந்தைகள் எவ்வாறு செல்கின்றனர் தெரியுமா? பலரும் அறிந்திடாத காட்சி
இந்தியாவில் பெரும்பாலும் பள்ளி பேருந்துகளை அவதானித்திருக்கும் நாம், அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து நாட்டில் பள்ளிகளுக்கு குழந்தைகள் எவ்வாறு செல்கின்றனர்? அவர்கள் பயணிக்கும் வாகனம் எவ்வாறு இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
இன்று தொழில்நுட்பங்கள் அதிகரிக்க அதிகரிக்க உலக அளவில் மாசுக்களும் அதிகரித்து வருவதுடன், மக்களின் உடல்நலத்திலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டும் வருகின்றது.
வாகனங்கள் அதிகமாகி வரும் நிலையில், சுற்றுச்சுழலும் அதிகமாக மாசு அடைந்து வருகின்றது. இன்று பள்ளிக் குழந்தைகள் பேருந்து மற்றும் வேன், இருசக்கர வாகனங்களில் தான் அதிகமாக பயணித்து வருகின்றனர்.
ஆனால் நெதர்லாந்து நாட்டில் வாகனங்களினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு குறைவாகவே இருந்து வருகின்றது. இதற்கான காரணத்தினை காணொளியில் அவதானித்தால் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.
ஆம் பெரும்பாலான குழந்தைகள், பெரியவர்கள் தங்களது பயணத்திற்கு சைக்கிளையே பயன்படுத்துகின்றனர். இதில் பள்ளிக்குழந்தைகள் எவ்வாறு சைக்கிள் பேருந்தில் மிகவும் உற்சாகமாக பயணிக்கின்றனர் என்பதைக் காணலாம்.
அதே போன்று அமெரிக்கா போன்ற நாட்டில் பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனம், குழந்தைகளை ஏற்றிக்கொண்டிருந்ததால், அது கிளம்பும் வரை எதிரேயும், பின்னேயும் வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றது.
ஆனால் இந்தியாவில் பள்ளிக் குழந்தைகளின் வாகனங்கள் பல நெருக்கமான சாலைகளிலும், பல நேரங்களிலும் விபத்தில் சிக்கும் அவலநிலையும் ஏற்படுகின்றது.