விஜய்யுடன் இருக்கும் இந்த சிறுவன் இன்று யார் தெரியுமா? பிரபல நடிகராம்
நடிகர் விஜய் சிறுவயதில் ஸ்ரீவித்யாவுடனும், மற்றொரு குழந்தை நட்சத்திரத்திடனும் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் ஆரம்பித்த விஜய்யின் திரைப்பயணம் தற்போதும் நீண்டு கொண்டே செல்கின்றது.
ஆரம்ப காலத்தில் அதிகமான விமர்சனங்களைப் பெற்ற இவர், இன்று உச்ச நடிகராகவும், அரசியலிலும் களம் இறங்கியுள்ளார்.
அரசியலில் முழுநேரமாக ஈடுபட்டு வரும் விஜய், சினிமாவில் இருந்தும் விலகுவதற்கு முடிவு செய்துள்ளார். இவரது கடைசி படமாகத் தான் ஜனநாயகன் என்று அறிவித்துள்ளார்.
ஹெச். வினோத் இயக்கும் இப்படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, நரேன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கலுக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஜய்.
சிறுவயதில் விஜய்
தற்போது விஜய் சிறுவயதில் நடிகை ஸ்ரீவித்யாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இப்படத்தில் ஸ்ரீவித்யா மட்டுமின்றி மற்றொரு நடிகரும் உள்ளார். இவர் வேறு யாருமல்ல பிரபல நகைச்சுவை நடிகர் கணேஷ் ஆவார்.
இப்புகைப்படத்தினை கணேஷின் மனைவியான நடிகை ஆர்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து, இது யார்? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரிவித்துள்ளார்.
பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கணேஷ் பின்பு நகைச்சுவை நடிகராகவும் படங்களில் நடித்து அசத்துகின்றார். தற்போது சின்னத்திரை சீரியலிலும் தனது நடிப்பினை வெளிக்காட்டி வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |