ஃபுட்ரெஸ்டில் குழந்தையை நிற்க வைத்து பயணித்த பெண்… வைரலாகும் பகீர் வீடியோ!
சமூக வளைத்தளங்களில் பிரபலமாகி விட வேண்டும் என்பதற்காக சிலர் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கின்றனர்.
குறிப்பிட்ட சிலர் பதிவிடும் சில காணொளிகள் பார்ப்பவர்களையே பயமுறுத்தும் வகையிலான இருக்கின்றது.
அந்த வகையில் சமீபத்தில் பெங்களூருவில் இருந்து வெளியான வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்த வீடியோவில் நகர்ந்து கொண்டிருக்கும் ஸ்கூட்டரின் கால் வைக்கும் ஃபுட் ரெஸ்ட்டில் சிறு குழந்தை ஒன்று நிற்பது போலவும், பெற்றோர்கள் அந்த ஸ்கூட்டரை போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு சாலையில் ஓட்டி சென்று போவதுமாக காண்பிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த வீடியோவில் காணப்படும் அந்தப் பெண்மணி ஹெல்மெட் எதுவும் அணியாமல் தன்னுடைய பக்கவாட்டில் குழந்தையை பிடித்துக் கொண்டு சிறிதும் பயம் இல்லாமல் பொறுப்பற்ற வகையில் செல்கின்றார்.
குறித்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் இந்த பெண்ணின் பொறுப்பற்ற செயலை கண்டித்து பலரும் கமெண்டு செய்து வருகின்றனர்.
Idiots on the road ?@blrcitytraffic @BlrCityPolice please take action. pic.twitter.com/tAN9BxTHiS
— ? ? ? ? ? ? ? ? (@Lollubee) April 15, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |