மகிழ்ச்சியாக Flying Kiss கொடுத்த குழந்தை! நொடியில் கண்ணீர் சிந்தி அழுத காட்சி
மூன்று வயதான கேமி என்ற சிறுமியின் பழைய காணொளி ஒன்று இன்ஸ்டாகிராமில் மீண்டும் வைரலாகி வருகின்றது.
கடந்த 2021 மார்ச் மாதம் பகிரப்பட்ட குழந்தையின் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி பலரையும் ஈர்த்து வருகிறது. மூன்று வயதாகும் கேமி என்கிற சிறுமி இன்ஸ்டாகிராமில் 131k பின்தொடர்பவர்களுடன் இணையத்தில் ட்ரெண்டாக இருக்கிறார்.
குறித்த சிறுமியின் குறும்புத்தனத்தினை அவ்வப்போது காணொளியாக எடுத்து வெளியிடுவார் இவரது தாய்.
இந்நிலையில் குறித்த காணொளியில், காரின் பின் சீட்டில் அழகிய உடை அணிந்துகொண்டு அந்த சிறுமி கேமி அமர்ந்திருக்கிறாள். காருக்கு வெளியே நிற்கும் அவள் தாத்தாவுக்கு அந்த சிறுமி ஃபிளையிங் கிஸ் கொடுக்கிறார்.
அந்த குழந்தையின் தாத்தாவும் முத்தம் கொடுத்துவிட்டு குழந்தையை பார்த்து ஆனந்தமாக கை அசைக்கிறார். அந்த குழந்தையும் தாத்தாவிற்கு டாட்டா காட்டிவிட்டு அவரை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடிக்கிறது.
இந்த காட்சி இணையத்தில் பார்த்த பலரையும் கண்கலங்க செய்திருக்கிறது. பலருக்கும் அவர்களது சிறு வயதில் தாத்தாவுடனான உறவை நினைவுபடுத்தும் விதமாகவும் இது அமைந்து இருக்கிறது.
அந்த வீடியோவுடன் "உங்கள் சிறந்த நண்பரான தாத்தாவை விட்டு நீங்கள் பிரியும்போது" என்கிற கேப்ஷனையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.