பழுதான ஆட்டோவில் வலியில் துடித்த கர்ப்பிணி பெண்: சிறு குழந்தை செய்த தரமான சம்பவம்
காரில் சென்று கொண்டிருந்த குழந்தை பழுதான ஆட்டோவில் வலியில் துடித்துக்கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக சிறுகுழந்தைகள் கடவுளுக்கு நிகராக பெரியவர்கள் கூறுவார்கள். இங்கு நடைபெற்றுள்ள சம்பவம் காண்பவர்களின் மனதினை நெகிழ வைத்துள்ளது.
ஆம் சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த ஆட்டோவிற்குள் வலியால் கர்ப்பிணி பெண் துடிக்க, ஆட்டோ சாரதி மற்ற வாகனங்களிடம் உதவிகேட்டு சாலையில் நிற்கின்றார்.
எந்த வாகனமும் நிற்காமல் சென்ற நிலையில், அத்தருணத்தில் நிற்காமல் சென்ற கார் பின்னோக்கி திரும்பி வந்துள்ளது. உள்ளே இருந்த குழந்தை வெளியே இறங்கி பார்த்து கர்ப்பிணி பெண்ணை கவனிக்கும் விதமும், உதவி செய்வதற்கு தனது காரில் ஏற்றிச் சென்றதையும் காணொளியில் காணலாம்.
இக்காட்சியினை ஐஎஃப்எஸ் அதிகாரி தரம்வீர் மீனா தனது டுவிட்டரில் பகிர்ந்து, 'இந்த குழந்தைக்கு சல்யூட்' என்று எழுதியுள்ளார். குழந்தையின் இந்த நெகிழவைக்கும் செயலை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அவதானித்துள்ளார். பலர் இந்த வீடியோ இயல்பானது அல்ல, உருவாக்கப்பட்டது என்றும் அழைக்கிறார்கள்.
ஆனால் 'வீடியோ ஸ்கிரிப்ட் செய்யப்பட்டிருந்தாலும், அதன் மூலம் பரவும் செய்தி ஆக்கப்பூர்வமானதாக உள்ளது. இது மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வைரல் வீடியோ இதோ....
Salute to the kid.
— Dharamveer Meena, IFS? (@dharamifs_HP) December 7, 2021
Even a bigger salute to her parents for nurturing right values at right age. #Humanity
pic.twitter.com/KQvirWoZp6