தனக்கு போட்டியாக சிறுவர்கள் வெளியிட்ட காணொளி... அனிருத் கொடுத்த ரியாக்ஷன்
இசையமைப்பாளர் அனிருத்திற்கு போட்டியாக இரண்டு சிறுவர்கள் வெளியிட்டுள்ள காணொளி வைரலாகி வருகின்றது.
இசையமைப்பாளர் அனிருத்
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் அனிருத், பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகின்றார்.
இந்நிலையில் சிறுவர்கள் இருவரின் காணொளி ஒன்று வைரலாகி வருகின்றது. கையில் சிறிய கீபோர்டு ஒன்றினை வைத்துக் கொண்டு அனிருத்திற்கு சவால் விட்டுள்ளார்.

தேவா என்ற சிறுவன், இரண்டே இரண்டு பேருக்குள்ள தான் போட்டி ஒன்னு அனிருத் சார், இன்னொன்னு என் தம்பி. டேய் ஜீவா வாசிடானு அண்ணன் சொன்னதும் அந்த சிறுவன் தன் திறமையை காட்டினான். சிதறுதுடா. உங்களுக்கு போட்டியா என் தம்பி வருவான் அனிருத் சார்னு தேவா சொல்லியிருந்தார்.
அதே மாதிரி அண்ணன் தேவாவை கீ போர்டு வாசிக்க வைத்து, அனிருத் சாருக்கும் என் அண்ணனுக்கும் தான் போட்டி என ஜீவா தெரிவித்தார்.
குறித்த காணொளி வைரலாகிய நிலையில், பலரும் சிறுவர்களுக்கு தங்களது கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். இவ்வாறு ட்ரெண்டான காணொளி அனிருத் கண்ணிலும் பட்டுள்ளது.
அனிருத் சிறுவர்களின் காணொளிக்கு சூப்பர்டா தம்பி, க்யூட்டீஸ்னு என்று கருத்துக்களை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி தயாரிப்பாளர் அதிதி ரவீந்திரநாத்தும், ஜீவா-தேவா காணொளியினை பார்த்து ஸ்மைலி போட்டுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |