வாழை இலையில் தடபுடலாக சாப்பிடும் குட்டி குழந்தை! அதிர்ந்து போன இணையவாசிகள்
சுமார் ஆறு மாதக்குழந்தையொன்று வாழை இலையில் சாதம் சாப்பிடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெரியோரை பார்த்து சாப்பிட பழகும் குழந்தைகள்
பொதுவாக தற்போது இருக்கும் குழந்தைகள் வீட்டிலிருக்கும் மற்றைய குழந்தைகளை பார்த்து குறிப்பிட்ட மாதங்களுக்கு பின்னர் நடக்கப்பதற்கு மற்றும் பேசுவதற்கு முயற்சிப்பார்கள்.
இன்னும் சிலர் பெற்றோர்கள் சாப்பிடும் போது மாதக்கணக்குள்ள குழந்தைகளை பக்கத்தில் வைத்து கொள்வார்கள்.
இவ்வாறு செய்யும் போது சாப்பிடாமல் இருக்கும் குழந்தைகள் கூட பெரியவர்கள் சாப்பிடுவதை பார்த்து விட்டு அவர்களை போல் சாதத்தை அள்ளி சாப்பிடுவார்கள்.
இந்த நுட்பத்தை கையாள தவறும் பட்சத்தில் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுப்பது என்பது மிகவும் கடினமான வேலையாக பார்க்கபடுகிறது.
சாதத்தை அள்ளி சாப்பிட்டு குட்டி குழந்தை
இந்த நிலையில் சுமார் 5 அல்லது 6 மாதக்குழந்தையொன்று பந்தியில் அமர்ந்து வாழையில் இருக்கும் சாப்பாட்டை பெரியவர்கள் போல் அள்ளி சாப்பிடுகிறது.
இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அப்பளத்தை வைக்கிறார்கள். அதனையும் எடுத்து பிய்த்து சாப்பிடுகிறது. இந்த காட்சி பார்ப்பதற்கே மிகவும் அருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த இணையவாசிகள், குழந்தையின் இந்த செயலுக்கு வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகிறார்கள்.