குழந்தையின் உயிரைப் பறித்த ருத்ராட்சம்! தூங்கிய போது நடந்த துயரம்
கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் அழுத்தி சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அரங்கேறியுள்ளது.
தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த 3 வயது குழந்தைக்கே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
அக்கலாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபி, பிரியா தம்பதியரின் 3வயது குழந்தை முகிலன். சம்பவத்தன்று முகிலன் உறங்கிக்கொண்டிருந்த போது, அவனது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்சம் சுவாசக்குழாயை அழுத்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
குழந்தையின் கழுத்தில் ருத்ராட்சம் அழுத்தியதற்கான தடயம் இருந்ததாக குழந்தையின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், பரிசோதனைக்கு பின்பே உண்மை காரணம் தெரியும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஓடும் ரயிலில் விழுந்த இளம்பெண்! பதபதைக்க வைக்கும் காட்சி