ஓடும் ரயிலில் விழுந்த இளம்பெண்! பதபதைக்க வைக்கும் காட்சி
அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் நகரில் ஓடும் ரயிலின் அடியில் விழுந்து பெண் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் ஒன்றும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மார்ச் 29-ம் தேதி நடந்த இந்த சம்பவத்தின் திடுக்கிடும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மயங்கி ரயிலில் விழுந்த பெண்
காண்டேலா என்ற பெண், ரயில் வந்து கொண்டிருக்கும் போது, நடை மேடையில் நின்று கொண்டிருக்கும் பெண் மயங்கி தடுமாறி விழுவதை வைரல் வீடியோவில் காணலாம். பின்னர் அவள் நிலை தடுமாறி முன்னோக்கி சாய்ந்து, ரயில் வண்டிக்கும் நடை மேடைக்கும் இடையே உள்ள இடைவெளியில் ரயில் வரும்போது விழுவதைக் காணலாம். ரயிலின் அடியில் அவர் விழும் விதத்தை பார்க்கும் போது, மனம் பதறும்
ரயில் பெட்டிகளுக்கு இடையே பெண் விழுந்த சம்பவத்தை நேரில் கண்ட போது, ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த பெண்ணை நிலையத்தில் நின்றிருந்த மற்ற பயணிகள் பாதுகாப்பாக இழுத்துச் சென்றதாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த பெண் பிளாட்பாரத்தில் படுத்திருப்பதைக் காண முடிந்தது. பின்னர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வெளியில் காத்திருந்த ஆம்புலன்சில் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார்.
கைக்குழந்தையுடன் பிக்பாஸ் கவின் வெளிவிட்ட புகைப்படம்! குவியும் லைக்ஸ்
உயிர்பிழைத்த பெண்ணின் பேட்டி
அர்ஜென்டினா தொலைக்காட்சி சேனலுக்குப் பேட்டியளித்த அந்தப் பெண், தான் எப்படி உயிர் பிழைத்தேன் என்பது இன்னும் அதிசயமாக இருப்பதாக தெரிவித்தார். அந்தச் சம்பவத்தை இன்னும் நினைத்தது பார்த்து எப்படி நடந்தது என அறிய முயற்சிப்பதாகத் தெரிவித்தார். “நான் இன்னும் எப்படி உயிருடன் இருக்கிறேன் என்று தெரியவில்லை. நான் இன்னும் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன், ”என்று அவர் கூறினார்.
விபத்தில் உயிர் பிழைத்த பிறகு தான் மீண்டும் பிறந்ததாக உணர்ந்ததாக கேண்டேலா மேலும் கூறினார். “எனக்கு திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மயங்கி விழுந்தேன். எனக்கு முன்னால் இருந்த நபரை நான் எச்சரிக்க முயற்சித்தேன், ஆனால் எனக்கு வேறு எதுவும் நினைவில் இல்லை, ” என்று அவர் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் கூறினார்.
So this happened recently in #BuenosAires #Argentina
— Diamond Lou®™ ? (@DiamondLouX) April 19, 2022
This woman apparently fainted and she fell under on an oncoming train, BUT SHE SURVIVED! She's now out of the hospital ? pic.twitter.com/EQA2V4foh9