விளையாடிக் கொண்டிருந்த சிறுவன்: தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சோகம்!
விளையாக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக மினசாரம் தாக்கியதில் தூக்கிவீசப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஒத்தவாடை பகுதியில் ராஜீவ்காந்தி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகின்றார்.
இவரது மகன் கபிலேஷ் வீட்டின் அருகே தரையில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக அருகிலிருந்த மின் இணைப்பு பெட்டியில் அவர் கை வைத்ததில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் கபிலேஷை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபிலேஷின் உடலை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இது பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.