நா இப்போ இப்படி இருப்பதற்கு காரணம் பேரன்பு படம் தான்! “தங்க மீன்கள்” சாதனா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?
பேரன்பு படத்தில் அங்கவீனமுற்ற குழந்தையாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் சாதானா.
இவர் அப்பா-மகள் சப்ஜெக்டைப் பேசிய இரண்டு படங்களில் நடித்து, நடிப்புக்காகத் தேசிய விருது பெற்றுள்ளார்.
ஆனால் தற்போது சினிமா வேண்டாம் என கூறி துபாயில் செட்டிலாகி படிப்பு, நடனம் என கவனம் செலுத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?
இந்த நிலையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “ என்னுடைய அப்பா துபாயில் வேலை பார்க்கிறார். இதனால் நாங்கள் குடும்பமாக இருக்கிறோம். சினிமா என்பது என்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மேஜிக் தான். இரண்டு பட வாய்ப்பு வந்தது அதற்கு கேரக்டர் எப்படியோ அதன்படி நடித்து கொடுத்தேன்.
ஆனால் சினிமாவில் என்னுடைய வாழ்க்கை முழுவதும் இருக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. பேரன்பு திரைப்படத்தில் நடித்த காரணத்தினால் என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தான் நா இப்போது “ஆக்குபேஷனல் தெரபி” படிப்பை படித்து கொண்டிருக்கிறேன்.
பின்னர் வாய்ப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். மாறாக அதுவரையில் படிப்பு மற்றும் நடனம் மீது கவனம் இருக்கட்டும்.” என ஓபனாக பேசியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ படத்தில் நடிப்பதால் இப்படியெல்லாம் மாற்றம் வருமா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |