அன்று குழந்தை நட்சத்திரம்... இன்று தேசிய விருது வாங்கிய பிரபலம்! யார் தெரியுமா?
சிறந்த ஒலி வடிவமைப்பாளருக்கு தேசிய விருது வாங்கியுள்ள குழந்தை நட்சத்திரத்தைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.
குழந்தை நட்சத்திரம்
சமீபத்தில் டெல்லியில் 70வது தேசிய திரைப்பட விருது விழா நடைபெற்ற நிலையில், இதில் சில திரைக்கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
அந்த வகையில் மணிரத்னம், நித்யா மேனன், ஏ.ஆர். ரஹ்மான், கேஜிஎஃப் சண்டைப் பயிற்சியாளர்கள் இரட்டையர்கள் அன்பறிவு, நடன இயக்குநர் சதீஷ் மற்றும் பலர் விருதுகளைப் பெற்றனர்.
Neeya Naana: கொதிக்கும் எண்ணெய்யில் நபரின் கை, பைக்கை தலைக்கு மேல் தூக்கிய நபர்! அரண்டு போன நடிகைகள்
இதில் “பொன்னியின் செல்வன்” முதல் பாகம் சிறந்த தமிழ் படமாகத் தேர்வானதுடன், சிறந்த இசை, ஒளிப்பதிவு, சிறந்த ஒலி என 4 பிரிவுகளில் தேசிய விருதுகளை தட்டிச் சென்றது.
இப்படத்தில் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான தேசிய விருது ஆனந்த் கிருஷ்ணமூர்த்திக்கு கிடைத்துள்ளது. இவர் அஞ்சலி, தளபதி, தலைவாசல், மே மாதம், சதி லீலாவதி போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஆவார்.
குழந்தை நட்சத்திரமாகக் கலக்கி இன்று சிறந்த ஒலி வடிவமைப்பாளர் என்ற உயரிய விருதான தேசிய விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |