முகம் எப்பொழுதும் பளபளப்பாக இருக்கனுமா? அப்போ இது மட்டும் போதும்
உணவில் அதிகமாக சேர்க்கப்படும் கடலை மாவின் நன்மைகளை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
கடலை மாவு
பொதுவாக சமையலில் இனிப்பு, காரம் என பலவிதமான உணவு தயாரிப்பில் அதிகமாக பயன்படுத்தப்படும் கடலை மாவு கொண்டைக் கடலையிலிருந்து தயாரிக்கப்படுகின்றது.
இதில் புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின்கள், மினரல்கள் ஆகியவை அதிகளவில் நிறைந்துள்ளது. தாவரப் புரோட்டீன் நிறைந்த இந்த மாவினை சைவப் பிரியர்கள், டயட் மேற்கொள்பவர்கள் தாரளமாக எடுத்துக் கொள்கின்றனர்.
நன்மைகள் என்ன?
சீலியாக் என்னும் நோய் உள்ளவர்கள் தாரளமாக சாப்பிடலாம். ஏனெனில் இம்மாவில் இயற்கையாகவே க்ளூட்டன் ஃபிரி உணவாக இருக்கின்றது. அதிகளவில் நார்ச்சத்து கொண்டுள்ளதால் ஜீரண பிரச்சினை இல்லாமல், ஜீரண உறுப்புகளும் சிறப்பாக செயல்படுகின்றது.
இதய நோய்களை ஏற்படுத்தும் LDL என்ற கெட்ட கொழுப்பின் அளவை கடலை மாவு வெகுவாக குறைக்கின்றது. மேலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சமநிலையில் வைக்கவும், டைப் 2 நீரிழிவு ஆபத்தை குறைக்கவும் செய்கின்றது.
பல திண்பண்டங்கள் செய்வதற்கு அதிகமாக பயன்படுத்தும் கடலை ஆரோக்கிய நன்மையை மட்டுமின்றி அழகையும் அதிகரிக்கின்றது.
ஆம் சோப்பிற்கு பதிலாக கடலை மாவு தேய்த்து குளித்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். கடலை மாவுடன், மஞ்சள் மற்றும் பன்னீர் சேர்த்து பேஸ்ட் செய்து முகத்தில் பூசி இருபது நிமிடம் கழித்து கழுவினால் முகம் நிச்சயம் பிரகாசமடையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |