மீன் மற்றும் சிக்கன் இவற்றில் எது ஆரோக்கியம்? அசைவ பிரியர்களே தெரிஞ்சிக்கோங்க
சிக்கன் மற்றும் மீன் இவற்றில் எது ஆரோக்கிய நன்மையினை அளிக்கின்றது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பெரும்பாலான நபர்கள் அசைவ உணவுகளை விரும்பி சாப்பிடும் நிலையில்,மீன் மற்றும் சிக்கன் இவற்றில் அதிக நன்மை எது அளிக்கின்றது என்பது தெரியாமல் தான் உள்ளது.
ஊட்டச்சத்து மதிப்பு, செரிமானம், சுவை மற்றும் ஆரோக்கியம் என அனைத்தும் எந்த அசைவ உணவில் அதிகம் என்பதை இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.

கோழி இறைச்சி
கோழி இறைச்சியில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இவை தசை மற்றும் எடை மேலான்மைக்கு உதவுகின்றது. இதிலுள்ள வைட்டமின்கள் மற்றும் துத்தநாகம், இரும்புச்சத்து போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து, ஆரோக்கியத்திற்கு உதவி செய்கின்றது.
மேலும் குறைந்த எண்ணெய் மற்றும் குறைவான மசாலா சேர்த்து சமைக்கும் சிக்கன் ஆரோக்கியத்தை அளிக்கின்றது. மேலும் கிரில், வேக வைத்த சிக்கன், சிக்கன் சூப் இவ்வாறு சாப்பிடும் போது சத்தானதாக இருக்கின்றது.
அதிக மசாலா சேர்த்து சமைக்கப்படும் போது கலோரி மற்றும் கொழுப்பு அதிகமாகின்றது. இவை ஆரோக்கியத்திற்கு கெடுதல் ஏற்படுத்துகின்றது.

மீனின் நன்மைகள்
அசைவ உணவுப்பிரியர்களுக்கு மிகவும் பிடித்த உணவாக இருக்கும் மீனிலும் அதிகமாக புரதச்சத்து மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம் உள்ளது.
இவை இதய ஆரோத்தினை மேம்படுத்துவதுடன், மன வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான சருமத்திற்கும் உதவி செய்கின்றது. மேலும் மீனில் வைட்டமின் டி, கால்சியம் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.
மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும், விரைவில் ஜீரணமாகவும், செரிமான பிரச்சனை உள்ளவர்களுக்கு மீன் சிறந்த தேர்வாக இருக்கின்றது.
சிக்கன் மற்றும் மீனில் அதிகமான சத்துக்கள் புரதம் காணப்பட்டாலும் தசையை உருவாக்குதற்கு சிக்கன் நன்கு பயன்படுகின்றது. ஆனால் இதய ஆரோக்கியம் மற்றும் எடை மேலாண்மை, மூளை செயல்பாடு இவற்றிற்கு மீனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
எப்பொழுதும் உணவில் ஒன்றினை மட்டும் எடுத்துக்கொள்வதற்கும், நம்புவதற்கும் பதிலாக இரண்டையும் சரியான அளவில் உணவில் சேர்த்துக்கொள்ளவது மிகவும் ஆரோக்கியம்..

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |