Siragadikka Aasai: முத்து, மீனா இடையே மீண்டும் ஏற்படும் விரிசல்... ரோகினியின் அடுத்த திட்டம் என்ன?
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி க்ரிஷை தனது வீட்டிற்குள் கொண்டுவந்துள்ள நிலையில், முத்து தத்தெடுப்பதற்கு மீனாவை அழைத்து வந்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பல சுவாரசியமான கதைகளங்களைக் கொண்டு செல்கின்றது. பெற்ற தாயே பிள்ளைகளை வெறுத்து ஒதுக்குகின்றார்.
வழக்கம் போன்று மாமியார் மருமகள் பிரச்சனையையும் கொண்டு வந்துள்ளனர். ஆனால் எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும் மீனா முத்து இருவரும் அசால்டாக முடித்துவிடுகின்றனர்.

ரோகினியின் முதல் திருமணம், க்ரிஷ் ரோகினியின் மகன் என்ற உண்மையை அறிந்த மீனா, பயங்கர அதிர்ச்சியிலும், எந்தவொரு வேலையினை செய்ய முடியாமல் இருந்நார்.
ஒரு கட்டத்தில் சண்டை போட்டு தனது தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், தற்போது மீண்டும் முத்து வீட்டிற்கு வந்துள்ளார். ரோகினியின் திட்டம் நாட்கள் செல்ல செல்ல அதிகமாகிக் கொண்டே செல்கின்றது.
தற்போது மீனாவிற்கு தெரியாமல், முத்து க்ரிஷை தத்தெடுப்பதற்கு அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் மீனா கோபமடைந்து முத்துவிடம் சண்டை போடுகின்றார்..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |